Friday, December 26, 2008

புகை பிடித்தால் நாய் கடிக்காது

மதுரையிலிருந்து ஒருத்தர் குதிரை வண்டி நெறய சிகரெட்டுகளை ஏத்திக்கிட்டு வந்து அதிரையில் பெட்டிக்கடை வச்சார். ஒரு பாக்கெட் சிகரெட் வாங்கினால் ஒரு தீப்பெட்டி இலவசங்கற ஆஃபரோட கடை நடத்தினார். பெரும்பாலான கடைகளில் அமுல் டப்பாக்குள்ள சிம்னி விளக்கும் பற்றவைக்க கட் பண்ணிய சிகரெட் அட்டைகளுமோ அல்லது நீண்ட கயிற்றின் நுனியில் கொள்ளி வைத்தோ இருந்ததால், அந்த ஆஃபர் யாரையும் கவரவில்லை.

மதுரைக்காரர் என்னென்னமோ செஞ்சு பார்த்தார் யாரும் சிகரெட் வாங்குவதா இல்லை. தன் வியாபார யுக்தியை மாற்றி மறுநாள் விளம்பரம் செய்தார். கூட்டம் அலை மோதியது விளம்பர வாசகம் இதுதான்:

1) இந்த சிகரெட் பிடிப்பவரை நாய் கடிக்காது.
2) இந்த சிகரெட் பிடிப்பவர் இருக்கும் வீட்டிற்கு திருடன் வரமாட்டான்.
3) இந்த சிகரெட் பிடிப்பவருக்கு பெண் குழந்தையே பிறக்காது.
4) இந்த சிகரெட் பிடிப்பவருக்கு முதுமையே வராது.

அவ்வளவுதான் போங்க. வியாபாரம் வெளுத்து வாங்கியது. மதுரைக்காரருக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. கல்லா பெட்டி நிரம்பி வழிந்தது. இவ்வாறாக மதுரைக்காரரின் சிகரெட் வியாபாரம் நன்றாக போய்க் கொண்டிருந்தது.

இதை பொறுமையாக கவனித்துக் கொண்டிருந்த, கொஞ்சம் விபரம் அறிந்த ஒருத்தர் மெதுவாக மதுரைக்காரரின் வாயைக் கிளறினார்.

அதிரைக்காரர்: என்ன மதுரைக்காரரே. இப்படி பொய் சொல்லி எங்க ஊரு மக்களை ஏமாற்றலாமா?

மதுரைக்காரர்: என்ன தம்பீ இப்டி சொல்லிப்புட்டிய. நான் உண்மையத்தானே சொல்லி விக்கிறேன்.

அதிரைக்காரர்: உங்க சிகரெட் பிடிப்பவரை நாய் கடிக்காதுங்கறீங்களேஃ

மதுரைக்காரர்: ஆமா. நெசந்தேன். சிகரெட் பிடிச்சா உடல் இளைச்சுடும். நடக்க கஷ்டமா இருக்கும். அதனால கைத்தடி துணையோடுதான் நடக்கனும். கையில கம்பு வச்சிருந்தா நாயி கடிக்காதுதானே?

அதிரைக்காரர்: ஓஹோ. அப்ப திருடன் வரமாட்டாங்கறது பீலாதானே?

மதுரைக்காரர்: நெசமாத்தேன் தம்பி. சிகரெட் அடிச்சா இருமல் வரும். இரவில் தூங்க முடியாது. ஒரே லொக்கு லொக்குன்னு இருமிக்கிட்டே இருப்பாங்க. திருடன் வரும்போது இருமல் சத்தம் கேட்டா வீட்டுக்காரங்க விழிச்சிக்கிட்டு இருக்காங்கன்னு வேற தெருவுக்கு போயிடுவாந்தானே?

அதிரைக்காரர்: (மனதுக்குள்: எமகாதகங்கப்பா இந்த மதுரைக்காரங்க!) ஆமா, பெண் பிள்ளை பிறக்காதுங்கிரீங்களே. அது எப்படி?

மதுரைக்காரர்: என்னா தம்பி ஒன்னும் வெளங்காதப் புள்ளையா இருக்கீங்க. சிகரெட் பிடிச்சா சரியா குடும்பம் நடத்த முடியாது. இவங்களுக்கு இல்லறத்தில் எந்தக் குழந்தையுமே பிறக்காது.

அதிரைக்காரர்: ச்சே உங்களைப் போயி தப்பா நெனெச்சுட்டேன். முதுமை வராதுன்னியலே....

மதுரைக்காரர்: ஆமா தம்பி. சிகரெட் பிடிச்சா இளவயதிலேயே கான்சர் வந்து செத்துடுவாங்க. அப்ப எப்ப்டி முதுமை வரும்?

ஆகவே, மக்களே மதுரையிலிருந்து மட்டுமில்லை எந்த ஊரிலிருந்து வந்து சிகரெட் விற்றாலும் தயவு செய்து புகை பிடிக்காதீர்கள்.

Friday, December 19, 2008

மனுஷனோட அடையாளம்

சலீம் நானாவும், பஷீர் காக்காவும் வழக்கம் போல பேசிக் கொண்டிருந்தனர். அவர்களின் பேச்சை கேட்டு, நல்ல பல விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம் என்று சிலரும் குழுமி இருந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர், "என்ன மொம்தம்பி, பாத்து நாளாச்சி? என்று தன் பக்கத்தில் அமர்ந்திருந்த முஹம்மத் தம்பியை பார்த்துக்கேட்க, அவரோ "அட ஆம்தம்பியா? நான்கூட உன்னைக் கண்டு நாளாச்சி, எப்படி இருக்கிறே? என குசலம் விசாரித்தார் அஹ்மத் தம்பியை நோக்கி.


இதைப் பார்த்த பஷீர் காக்காவுக்கு மூக்குமேல் கோபம் வந்துவிட்டது. "அட கிறுக்கு புடிச்ச பயல்களா, அழகான பெயர முறையா கூப்டாம, அவசரத்துல யான்கடா இப்படி குழப்புறீங்க. அபூபக்கர் என்ற அழகான பெயர, அவ்கருன்னும், முகைதீன் அப்துல் காதர் - மய்யத்துக்காரு என்றும், நெய்னா முஹமத் சாஹிப்-நெயனாம்சா என்றும், பாக்கர் சாஹிப்-வாகர்சா என்றும், கதீஜாவை கர்சா என்றும், அஹ்மத் பாத்திமாவை ஆமாத்து என்றும், முஹம்மத் பாத்திமா என்பதை மொம்மாத்து என்றும் இப்படி போட்டு மாத்தி போடுறது நல்லாவா இருக்கு?"என்று கடுப்போடு கேட்டார்.

"ஒரு மனுஷனோட அடையாளம், அவனோட பேருதான். அதே மாதிரி குடும்ப பேரையும் தன்னோட இஷ்டத்துக்கு வச்சி கூப்புடுறாங்க. சமையல் பாத்திரங்கள் பேர்ல குடும்ப பேரு,நிறத்தை வச்சி குடும்ப பேரு, தொந்தியை வச்சி, உயரத்தை வச்சி, நிறத்த வச்சி, மிருகங்கள் பேர வச்சி,அடாடா எப்படியெல்லாம் கூப்பிடறாங்க. இதுக்கு ஒரு அளவே இல்லாம போச்சி. தயவு செஞ்சி இனிமே இப்படி யாரும் கூப்பிடக் கூடாது " ஆத்திரத்தோடு சொன்னார் பஷீர் காக்கா.
***********************************************

அநீதமிழைக்கப்பட்டவரைத்தவிர,வார்த்தையில் தீயதை பகிரங்கமாக கூறுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான்.அல்லாஹ்(யாவையும்)செவி ஏற்கிறவனாக, நன்கு அறிந்தோனாக இருக்கிறான். திருக்குரான் 4:148

Monday, December 15, 2008

அமெரிக்க அதிபர் புஷ் க்கு செருப்பு அடி. படம். பாக்தாத்தில் அவமானம் - புஷ் மீது ஷூ வீச்சு

இந்த சம்பவத்தால் புஷ் அதிர்ச்சி அடைந்தார். அவரது முகம் பேயறைந்தது போல மாறியிருந்ததைக் காண முடிந்தது.

பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத் வந்த அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது எகிப்தைச் சேர்ந்த டிவி நிருபர் ஒருவர் தனது இரு ஷூக்களையும் சரமாரியாக வீசி எறிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் ஜார்ஜ் புஷ் கடைசி முறையாக ஈராக்குக்கு விஜயம் செய்தார். தலைநகர் பாக்தாத் வந்த அவர் பிரதமர் நூரி அல் மாலிக்கை சந்தித்துப் பேசினார்.பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு கடைசி முறையாக ஈராக் வர வாய்ப்பு கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைவதாக அவர் மாலிக்கியிடம் தெரிவித்தார்.

பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். முதலில் மாலிக்கி பேசினார். பின்னர் புஷ் பேசத் தொடங்கினார்.

அப்போது திடீரென அரபி மொழியில் சத்தமாக கத்தியபடி ஒரு நிருபர் எழுந்தார்.ஈராக் மக்கள் உனக்கு அளிக்கும் கடைசி குட்பை முத்தம் இதுதான், நாயே என்று கோபமாக கூறியபடி தனது ஷூக்களை அடுத்தடுத்து புஷ்ஷை நோக்கி ராக்கெட் போல வீசினார்.

முதல் ஷூ பாய்ந்து வந்தபோது புஷ் தலையைக் குணிந்து தப்பினார். அந்த ஷூ பின்னால் உள்ள சுவரின் மீது பட்டு விழுந்தது.2வது ஷூ வீசப்பட்டபோது அதைப் பிடிக்க ஈராக் பிரதமர் மாலிக்கி முயன்றார். ஆனால் முடியவில்லை.

இருப்பினும் அந்த ஷூவும் புஷ்ஷை உரசியபடி சென்று விழுந்தது.

இந்த சம்பவத்தால் புஷ் அதிர்ச்சி அடைந்தார்.அவரது முகம் பேயறைந்தது போல மாறியிருந்ததைக் காண முடிந்தது.

இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புப் படையினர் சுதாரித்துக் கொண்டு அந்த நிருபரை மடக்கிக் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

அவர் எகிப்து நாட்டைச் சேர்ந்த டிவி நிறுவன செய்தியாளர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

மத்திய கிழக்கு நாடுகளில் ஒருவர் மீது செருப்பு அல்லது ஷூவை தூக்கி வீசினால் அது மிகப் பெரிய அவமானமாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பி்ன்னர் நிலைமை சகஜமானது. அதன் பிறகு புஷ் பேசுகையில், அரசியல் கூட்டத்தின்போது நடப்பதைப் போல இப்போது நடந்து விட்டது. மக்களின் கவனத்தைக் கவர செய்யப்படும் செயல் இது. அந்த நபரின் (செய்தியாளர்) கவலை என்ன என்று எனக்குத் தெரியவில்லை. ஏன் இப்படி நடந்து கொண்டார் என்பதும் எனக்குப் புரியவில்லை என்றார் புஷ்.பதவி விலகிச் செல்லும்போது பாக்தாத்தில் புஷ்ஷுக்குக் கிடைத்த இந்த வரவேற்பு அமெரிக்காவிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

THANKS TO : http://thatstamil.oneindia.in/news/2008/12/15/world-bush-on-farewell-visit-to-iraq-dodges-flying.html#cmntTop

Sunday, December 14, 2008

கொடுவா மீனு திண்டு நாளாச்சி


சலீம் நானாவுக்கு இதைக் கேட்டு விட வேண்டும் என்ற துடிப்புடன் காணப்பட்டார்.ஆனால் பஷீர் காக்காவைத்தான் இன்னும் காணவில்லை. மீன் வாங்கத்தான் கடத்தெருவுக்கு போய்விட்டாரா,அல்லது நெட்டில் அதிரை எக்ஸ்பிரஸ் நோட்டம் விடுகிறாரா?ஒன்னும் புரியலய,நானா அங்கலாய்த்துக் கொண்டிருக்கும்போதே "அஸ்ஸலாமு அலைக்கும்" என்ற குரல் வரவே திரும்பிப் பார்த்தால்,அட நம்ம பஷீர் காக்காவேதான்.

"வ அலைக்கும் சலாம் காக்கா, என்ன இவ்ளோ நேரமா காணோம்?"சலீம் நானா.
"அதில்லை சலீமு,கொடுவா மீனு திண்டு நாளாச்சி,அதான் பொடி நடையா கடைத்தெரு வரைக்கும் போய், கொடுவா மீனு வாங்கி வந்தேன்,அதான் லேட்டு".என்ற பஷீர் காக்காவின் பேச்சில் சோர்வு தெரிந்தது.

"உங்கள ரொம்ப நேரமா எதிர் பார்த்துக்கிட்டு இருந்தேன்,ஒரு சந்தேகம் கேக்கலாமேன்னு?என்ற சலீம் நானாவைப் பார்த்துக் கேட்டார் பஷீர் காக்கா,"சொல்லு சலீமு,என்ன சந்தேகம்,தெரிஞ்சா சொல்லுதேன்,இல்லியன்ன தெரிஞ்சவங்க கிட்ட கேட்டு சொல்றேன்."

"பொதுவா காக்கா,மழயோ,புயலோ,கடல் கொந்தளிப்போ,பூகம்பமோ இன்னும் என்னல்லாம் ஏற்படுதோ, அப்பல்லாம்,அதை இயற்கை,இயற்கை சீற்றம், அப்படீன்னு, பேபர்ல எழுதுறாங்க.இப்படி அவைகளை இயற்கை,இயற்கையின் சீற்றம் இப்படி சொல்லலாமா?

பசீர் காக்கா சிறிது யோசித்து விட்டு சொன்னார்,"கூடாது,அப்படி சொல்லக் கூடாது.காரணம் என்னனா,கடல்,மலை,மண்,காத்து,மழை,பிரபஞ்சம்,கோள்கள் இன்னும் சிலவற்றை இறை நிராகரிப்பாளர்கள் தான் இயற்கை,இயற்கை என்பார்கள்.ஏனெனில்,அவர்கள் அவைகள் அனைத்தையும் படைத்தது ஏக இறைவன் அல்லாஹ்தான் என்று ஏற்றுக் கொள்வதில்லை.அதனால்தான் அவைகளைஎல்லாம் இயற்கை என்று விடுகிறார்கள்.இதை நாமளும் நமக்கு அறியாமலேயே பயன் படுத்தி விடுகிறோம்.உதாரணமா கடல் கொந்தளித்தால்,பூகம்பம் ஏற்பட்டால்,அது இயற்கையின் சீற்றம் என்று சொல்லி விடுவது.அதாவது அது இயற்கையினால்,அதன் சில வேதி இயல் அல்லது மற்ற காரணங்களால் ஏற்படுகிறது என்பர்.இப்படி காரணத்தை அடுக்கிக் கொண்டே போவார்கள்.இதைத்தான் ஆங்கிலத்திலும் "மதர் நேச்சர்" என சொல்கிறார்கள்."

"ஆனால் நம்மை பொறுத்தவரை,உண்மையும்,சத்தியமும் அதுதானே,என்ன நடந்தாலும் சரி,அது அத்தனையும் நம் அனைவரையும், பிரபஞ்சத்தையும், எல்லாவற்றையும் படைத்து,பரிபக்குவப் படுத்தி,பாதுகாத்துவரும் அல்லாஹ் தான் ஆக்குகிறான்,அழிக்கிறான்,பாது காக்கிறான்.அவன் உத்தரவு இன்றி எதுவும் நடப்பதில்லை,இதை புரிந்து கொண்டால் போதும்" என அழகாக விளக்கினார் பஷீர் காக்கா. சலீம் நானாவுக்கு சந்தோசம்,தன் சந்தேகம் தீர்ந்ததர்க்கும், உண்மையை விளங்கி கொண்டதற்கும்.
----------------------------------------------------------------------------
திருக்குர்ஆன்

மேலும் (நபியே)உமதிரட்சகன்,தான் நாடியவற்றை படைக்கிறான்.(தன்னுடைய தூதுக்காக அவர்களில் தான் விரும்பியவர்களைத்) தேர்ந்தெடுக்கிறான்.(அவ்வாறு தூதரைத்)தேர்ந்தெடுத்தல் அவர்களுக்கு இல்லை.அல்லாஹ் மிக பரிசுத்தமானவன். இன்னும் இவர்கள் இணை வைப்பவைகளை விட்டும் அவன் மிக்க உயர்ந்தவனாகிவிட்டன்.28:68

வானங்களையும்,பூமியையும் அல்லாஹ் நீதியைக் கொண்டு (தக்க காரணத்திற்காகவே) படைத்திருக்கிறான்.இன்னும்,ஒவ்வொரு ஆத்மாவும் அது சம்பாதித்ததைக் கொண்டு, கூலி கொடுப்பதற்காகவும் (படைத்துள்ளான்)அவர்கள் அநியாயம் செய்யப்படவுமாட்டார்கள்.45:22

(மனிதனே)உன்னை அழிக்கக் கூடியது நெருங்கி விட்டது!பின்னரும் அழிக்கக் கூடியது நெருங்கி விட்டது.
பின்னும் உன்னை அழிக்கக் கூடியது நெருங்கி விட்டது! அப்பாலும் உன்னை அழிக்கக் கூடியது நெருங்கி விட்டது.
(எத்தகைய கேள்வி கணக்கும் கேட்கப்படாமல் )வீணாக விடப்பட்டு விடுவான் என்று மனிதன் எண்ணிக் கொண்டானா? 75:34,35,36

Monday, December 8, 2008

ஹஜ்ஜுப்பெருநாள் நல்வாழ்த்துக்கள் !


ஒரு தியாகியின் சாதனை உலகம் அழியும் மட்டும் ஒலித்துக்கொண்டிருக்கிறது....
அல்லாஹுஅக்பர் ! அல்லாஹுஅக்பர் ! அல்லாஹுஅக்பர் ! அல்லாஹுஅக்பர் !
எங்கள் மனது நிறைந்த புனித ஹஜ்ஜுப்பெருநாள் நல்வாழ்த்துக்கள் !

Saturday, December 6, 2008

மாகாண சபை உறுப்பினர் மீது தாக்குதல்


வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ் ஏ. எஹியா மீது கணமூலையில் வைத்து பிரதேச அரசியல் பிரமுகர் ஒருவரின் தலைமையிலான குழுவினர் தாக்குதல் நடத்தியதில் மாகாண சபை உறுப்பினரின் வாகனம் சேதத்துக்குள்ளானதுடன் அவரும் அவரது பிரத்தியேகச் செயலாளரும் காயமடைந்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 1.45 மணியளவில் இச்சம்பவம் கணமூலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

முந்தல் மதுரங்குளி பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் பிராந்திய கோப் சிட்டி விற்பனை நிலையம் ஒன்று இன்று கணமூலை பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட இருந்தது. இவ்வைபவத்திற்கு வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஹியா உட்பட பல பிரமுகர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். குறித்த நேரத்திற்கு அங்கு சென்ற மாகாண சபை உறுப்பினரர் தனது வாகனத்திலிருந்து இறங்கும் போது அங்கு வந்த பிரதேச அரசியல்வாதியும் ஆதரவாளர்களும் அவரை கீழே இறங்கவிடாது உனக்கு இங்கே வேலை இல்லை. இங்கே வரக்கூடாது இது எமது ஊர் என்றெல்லாம் கூறி தாக்கியதாக எஹியா கூறினார். இதன் காரணமாக தனக்கும் தனது பிரத்தியேகச் செயலாளருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதுடன் தனது வாகனத்துக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் தாம் முந்தல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த கலகத்தை அடுத்து திறக்கப்படவிருந்த கோப் சிட்டி விற்பனை நிலையத்தை தாமதித்தே திறக்க வேண்டி ஏற்பட்டதாக சங்கத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கணமூலை பிரதேசத்தில் இந்தக் கோப் சிட்டி நிலையத்தினை அமைக்க வேண்டும் என எமக்கு சிபாரிசு செய்தவர் மாகாண சபை உறுப்பினர் எஹியாதான். அவரின் வேண்டுகோளுக்காகவே நாம் இந்நிலையத்தை ஆரம்பிக்க ஏற்பாடு செய்தோம். எனினும் அவரை அந்நிகழ்வில் கலந்து கொள்ள விடாது தடுக்கப்பட்டமை கவலையளிக்கிறது என மற்றொரு அதிகாரி கூறினார்.

வடமேல் மாகாண சபையில் ஆளும் தரப்பிலிருந்து அண்மையில் எஹியா எதிர்த்தரப்பிற்கு மாறியது இங்கு குறிப்பிடத்தக்கது.

எம். எஸ். முஸப்பிர்

Wednesday, December 3, 2008

செல்வமும் வறுமையும்


إنا جعـلنا مَا عَلَى الأرض زِينَةً لَّهَا لِنَبْلُوَهُمْ أَيُّهُمْ أَحْسَنُ عَملا ، وَإِنَّا لَجَاعِـلُونَ مَا عَـلَيْهَا صَعِـيدًا جُرُزًا

'அவர்களில் அழகிய நல்லறம் செய்பவர் யார் எனச் சோதிப்பதற்காக இந்தப் பூமியின் மேல் உள்ளவற்றை அதற்கு அலங்காரமாக நிச்சயமாக நாம் ஆக்கியுள்ளோம். மேலும், நாம் அதிலுள்ள அனைத்தையும் நிச்சயமாக (ஒருநாள்) அழித்துப் பாலைநிலமாக்கி விடுவோம். (அல்-குர்ஆன் 018:007-008)

கடவுளை எல்லா மதத்தவர்களும் நம்புகின்றனர். ஆனால் மற்ற எந்தச் சமயத்தவர்களையும் விட முஸ்லிம்களின் கடவுள் நம்பிக்கை வலிமை மிக்கதாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

பக்திமான்களாக இருந்தவர்கள்கூட, தங்கள் வாழ்க்கையில் துன்பங்களைச் சந்திக்கும் போது நாத்திகர்களாகி விடுவதை மற்ற மதத்தவர்களிடம் சர்வ சாதாரணமாகக் காண்கிறோம்.

கடவுள் என வர்கள் நம்புகின்ற கற்சிலைகளுக்கு முன்னால் நின்று கொண்டு அதைத் திட்டுகின்ற காட்சியையும் மண்ணை வாரி தூற்றுகின்ற காட்சியையும் பிற மதத்தவர்களிடம் சர்வ சாதாரணமாக காண் முடிகின்றது. "கடவுளே! உனக்கு கண் இருக்கிறதா?" என்றெல்லாம் துன்பம் வரும் வேளையில் புலம்புகின்றவர்களையும் நாம் பார்க்கிறோம்.

கடவுளை நம்புகின்ற மற்ற மதத்தவர்களிடம் காணப்படும் இந்தக் கோளாறு முஸ்லிம்களிடம் காணப்படுவதில்லையே அது ஏன்?

மற்ற மதத்தினர் தவறான அடிப்படையின் மீது தங்கள் நம்பிக்கை எனும் மாளிகைகளை எழுப்பிக் கொண்டதுதான் இதற்குக் காரணம்.

இவ்வுலகில் வாழ்கின்ற மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரியான செல்வச் செழிப்புடனும் வசதி வாய்ப்புகளுடனும் இருப்பதில்லை. சிலர் அதிகமான வசதிகளையும் பதவிகளையும் பெற்றுள்ளனர். பலர் இத்தகைய வாய்ப்பைப் பெற்றிருக்க வில்லை. இதற்குக் காரணம் என்ன என்பதை விளக்கும்போது மற்ற மதங்கள் செய்கின்ற தவறுகள்தாம் அடிப்படைக் கோளாறு எனலாம்.

"நீ கடவுள் மீது பக்தியுடன் இருந்தால் உனக்கு எண்ணற்ற வசதிகள் கிடைக்கும்" என்று ஏழைகளிடம் அம்மதங்கள் பேசுகின்றன. "சென்ற பிறவியில் நல்ல பக்திமானாக இல்லாததே நீ இப்போது ஏழையாக இருப்பதற்குக் காரணம்" என்றும் அவனுக்கு அறிவுரை கூறுகின்றன.

இது போல் வசதி வாய்ப்புகளுடன் உள்ளவனை நோக்கி, "கடவுள் உன்மீது அன்பாய் இருக்கிறார். நீ நல்லவனாக இருப்பதால்தான் இந்த நிலையை அடைந்திருக்கிறாய்" என்றும் "சென்ற பிறவியில் நீ நல்லவனாக இருந்ததால் தான் இந்த உயர்ந்த நிலை கிடைத்தது" என்றும் பேசுகின்றன.

செழிப்பாய் இருந்தவனுக்கு ஒரு நட்டம் ஏற்பட்டால், "இவன் ஏதாவது தவறு செய்திருப்பான்" என்று கூறுவதும் தனால்தான் இப்படி ஏற்பட்டது என்று பேசுவதும் இந்த நம்பிக்கையின் வெளிப்பாடுதான்.

கீழ் நிலையில் இருந்த ஒருவனுக்கு நல்ல நிலை ஏற்பட்டால் அவன் கொடுத்து வைத்திருக்கிறான். இவன் புண்ணியம் செய்திருப்பான் என்று காரணம் கூறுவதற்கும் இந்த நம்பிக்கைதான் காரணம்.

இந்த நம்பிக்கை ஆழமாகப் பதிந்த பிறகு ஒரு கேடுகெட்டவன் உயர்ந்த நிலையை அடைவதைப் பார்க்கும் போதும் ஒரு நல்லவன் சொல்லொனாத் துன்பத்தை அடையும் போதும் கடவுள் நம்பிக்கையே அவன் உள்ளத்திலிருந்து விலகி விடுகிறது. மதத்தை வளர்ப்பதற்காகப் பொய்யான காரணங்களைக் கூறி நம்மை ஏமாற்றி விட்டனர் என்று அவனுக்குக் கோபம் ஏற்படுகின்றது. இதனால் தான் கடவுள்(?) மீதே மண்ணை வாரித் தூற்ற முடிகின்றது.

ஆனால் இஸ்லாம் பொய்யான காரணங்களைக் கூறி மக்களை ஏமாற்றவில்லை. பொய்யான வாக்குறுதிகள் எதனையும் அளிக்கவில்லை. எது உண்மையோ அதை மட்டுமே கூறுகின்றது.

இவ்வுலகில் உள்ள ஏழைகள் பலரை நாம் பார்க்கிறோம். அவர்கள் அனைவரும் கெட்டவர்களாக இருப்பதில்லை. அதுபோல் அனைவரும் நல்லவர்களாகவும் இருப்பதில்லை. அவர்களது ஏழ்மை நிலைக்கும் அவர்களது பாவ புண்ணியத்திற்கும் ஒரு தொடர்பும் இல்லை என்பது கண்கூடாகத் தெரிகின்ற உண்மை.

அதுபோல் செல்வந்தர்களிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தே உள்ளனர். வர்களின் செல்வ நிலைக்கும் பாவ புண்ணியத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லாமலிருப்பதைக் காண்கிறோம்.

இந்த நிதர்சனமான உண்மையை அப்படியே கூறுகின்ற ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே!

இவ்வுலகில் நல்ல வசதி வாய்ப்புகளுடன் இருப்பதற்கும் நல்லவர்களாக இருப்பதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இந்த வசதிகளைப் பெற்ற பிறகும் நீங்கள் நல்லவர்களாக வாழ்கிறீர்களா என்று சோதித்துப் பார்க்கவே இவை வழங்கப்பட்டுள்ளன. வசதிகள் வந்தபின் அதன் காரணமாக ஆணவம் பிடித்து அலைந்தால் நீ கெட்டவனாவாய்! அதை மற்றவருக்கு வாரி வழங்கி நற்செயல்களில் உன்னை ஈடுபடுத்திக் கொண்டால் நல்லவனாவாய் என்று இஸ்லாம் கூறுகின்றது.

அதுபோல் நீ வசதி வாய்ப்புகளைப் பெறவில்லை என்பதால் நீ கெட்டவன் இல்லை. இந்த வறுமையின் காரணமாக நீ தடம் மாறுகிறாயா அல்லது தடம் புரளாமல் உறுதியாக நிற்கிறாயா? என்று சோதித்துப் பார்க்கவே இந்த நிலை என்று இஸ்லாம் கூறுகின்றது.

செழிப்பு வறட்சி இரண்டுமே இரண்டு வகையான பரீட்சைகள் என்று இஸ்லாம் கூறுகின்ற காரணத்தினால்தான் முஸ்லிம்கள் எத்தகைய துன்பத்தை அடைய நேர்ந்தாலும் அவர்கள் அதைப் பொறுத்துக் கொள்கின்றனர். "கடவுளே உனக்கு கண்ணில்லையா?" என்று கேட்பதில்லை.

இரண்டு நிலையில் எது ஏற்பட்டாலும் இரண்டும் சோதனைதானே தவிர நம்மை நல்லவன் கெட்டவன் என்று வழங்கப்படும் தீர்ப்பு அல்ல. இனிமேல்தான் தீர்ப்பு வழங்கப் படவுள்ளது. அங்கே நல்ல தீர்ப்புப் பெறுவதற்காக வறட்சியிலும் செழிப்பிலும் நிலை குலையாமல் இருக்க வேண்டும் என்று உறுதியான அடிப்படையின்மீது முஸ்லிம்களின் நம்பிக்கை எழுப்பப் பட்டுள்ளது.

அல் கஹ்ஃப் (குகை) அத்தியாயத்தின் ஏழாவது வசனமும் அந்த அடிப்படையைத் தான் சொல்லித் தருகின்றது. இப்பூமியில் உள்ள செழிப்புகள் யாவும் நீங்கள் நல்லவர்களாக நடக்கிறீர்களா என்று சோதித்துப் பார்ப்பதற்குத்தான் என்று கூறி முஸ்லிம்களின் நம்பிக்கையைப் பலமான அஸ்திவாரத்தின் மீது எழுப்புகின்றது. பின்வரும் வசனங்களும் இந்த வசனத்தின் விளக்கவுரைகளாகத் திகழ்கின்றன.

'நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும் பசியாலும் பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பாலும் சோதிப்போம். ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (பொறுமையுடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது 'நிச்சயமாக நாம் அல்லாஹ்விற்கே உரியவர்கள். நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள்' (அல்குர்ஆன் 002:155-156).

'(முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும் உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப் படுவீர்கள். உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்தும் இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள். ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடித் தருகின்ற) தீர்மானத்திற்குரிய செயலாகும்'. (அல்குர்ஆன் 003:186)

'ஒவ்வொர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது. பரீட்சைக்காக கெடுதியையும் நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர் நம்மிடமே நீங்கள் மீட்கப் படுவீர்கள்'. (அல்குர்ஆன் 021:035).

வாழ்வில் இன்பம் வரும்போது அகமகிழ்ந்திருந்து, துன்பம் சூழும்வேளை இறைவனைக் குறைகூறக் கூடாது என்று கீழ்க்காணும் இரு வசனங்கள் முஸ்லிம்களை எச்சரிக்கின்றன:

'இன்னும்; மனிதர்களில் (உறுதியுடன் இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான். அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கின்றான். ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின் அவன் (தன் முகத்தை) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கின்றான். இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான். இதுதான் தெளிவான நஷ்டமாகும்'. (அல்குர்ஆன் 022:011).

'இறைவன் மனிதனை கண்ணியப்படுத்தி, அவனுக்கு பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும்போது 'என் இறைவன் என்னைக் கண்ணியப் படுத்தியுள்ளான்' என்று கூறுகின்றான். எனினும் அவனுடைய வாழ்வாதாரத்தைக் குறைத்து அவனை (இறைவன்) சோதித்தாலோ அவன், 'என் இறைவன் என்னைச் சிறுமைப் படுத்தி விட்டான்' என்று கூறுகின்றான்'. (அல்குர்ஆன் 089:015-016)

எனவே செல்வமும் வறுமையும் சோதனைக்குத்தான் என்பதை உணர்ந்து சோதனையில் தேறிட வல்ல இறைவன் அருள் புரியட்டும்.

நன்றி : இஸ்லாமிய தஃவா

Tuesday, December 2, 2008

இஸ்லாமிய சேனல் நடத்திய கத்தோலிக்க கிறிஸ்தவர் இஸ்லாமைத் தழுவினார்!!!

"பின்னாட்களில் நாம் ஒளிபரப்பும் சேனலில் என்னவெல்லாம்
கூறப்படுகிறது என்பதை கவனிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போதுதான் இஸ்லாத்தின் உயர்வான போதனைகளை உணர முடிந்தது. பிறகு குர்ஆனை ஆய்வுக்கு எடுத்தேன். நேர்வழிக்கான வாசலை குர்ஆன் எனக்கு திறந்து விட்டது. "
குமரி மாவட்டம் கிறிஸ்தவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு மாவட்டமாகும். கொள்கைகளால் வேறுபட்டிருந்தாலும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர். இம்மாவட்டத்தில், பாதிரிகள், சமூக நல ஆர்வலர்கள், இளைஞர்கள் என பல கிறிஸ்தவர்களும் இஸ்லாமைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு வருகின்றனர். சமீபத்தில் மோகனன் என்ற கத்தோலிக்க கிறிஸ்தவப் பிரிவைச் சேர்ந்த சகோதரர் ஒருவர் இஸ்லாமைத் தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார். இஸ்லாமைத் தழுவுவதற்கு முன்னரே இஸ்லாமியத் தொலைக்காட்சி நடத்தியவர் அதன் காரணமாகவே இஸ்லாத்தின் பால் கவரப்பட்டிருக்கிறார். சகோதரர் மோகனன் தனது பெயரை காலித் என்று மாற்றம் செய்துள்ளார். அவர் அல்ஜன்னத் இதழுக்கு அளித்த பேட்டியை வாசகர்களுக்காக சமர்ப்பிக்கின்றோம்.


நன்றி: அல்ஜன்னத் நவம்பர் 2008
அல்ஜன்னத்: நீங்கள் இஸ்லாத்தை ஏற்க காரணமான நிகழ்வுகள் குறித்து...

சகோதரர்: கேபிள் டி.வி. தொழில் செய்து வரும் நான், இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும் இன்றைய மீடியாக்கள் எதை கற்பிக்கின்றனவோ, அதாவது தீவிரவாதிகள், வன்முறையாளர்கள், பிற்போக்கு மதம் இதுதான் எனது கருத்தாகவும் இருந்தது. எனது கேபிள் நெட்வொர்க் மூலம் இஸ்லாமிய சேனல் என்ற பெயரால் நிகழ்ச்சி நடத்தினால் வருமானம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் கடந்த பிப்.2008-ல் துவங்கினேன். முஸ்லிம்களுக்கென தமிழில் தனிச் சேனல் இல்லையே என்ற ஏக்கம் முஸ்லிம்களிடம் இருப்பதை அறிந்த நான் அதையே எனது வருமான பெருக்கத்திற்கான வழிமுறையாக தேர்வு செய்தேன். பின்னாட்களில் நாம் ஒளிபரப்பும் சேனலில் என்னவெல்லாம் கூறப்படுகிறது என்பதை கவனிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போதுதான் இஸ்லாத்தின் உயர்வான போதனைகளை உணர முடிந்தது. பிறகு குர்ஆனை ஆய்வுக்கு எடுத்தேன். நேர்வழிக்கான வாசலை குர்ஆன் எனக்கு திறந்து விட்டது.

அல்ஜன்னத்: தங்கள் குடும்பம் பற்றி...

சகோதரர்: ரோமன் கத்தோலிக்க பிரிவைச் சார்ந்த நாடார் கிறிஸ்தவ குடும்பத்தைச் சார்ந்தவன் நான். இஸ்லாத்தை ஏற்றது குறித்து எனது குடும்பத்தில் ஆரம்பத்தில் சில சலசலப்புகள் ஏற்பட்டன. அவ்வளவாக பெரிய அளவு எதிர்ப்பு ஏதுமில்லை.

அல்ஜன்னத்: இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் பற்றி தங்கள் கருத்து...?

சகோதரர்: தஹஜ்ஜத் எனும் ஒரு நடு நிசித் தொழுகை என்னை மிகவும் கவர்ந்த அம்சம். மன அமைதியும் உள்ள ஒற்றுமையும் இதில் ஏற்படுகிறது. துஆக்கள் அங்கீகரிக்கப்படுகிறது என்பதை அனுபவ பூர்வமாக உணர்கிறேன்.

அல்ஜன்னத்: நீங்கள் நடத்தும் இஸ்லாமிக் சேனல் குறித்து...

சகோதரர்: குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலான பயான் சி.டிக்கள் ஒளிபரப்புதல், இஸ்லாமிய அறிஞர்கள், சிந்தனையாளர்களின் பயான் அல்லது அவரது பேட்டிகள் நேரடி (LIVE) ஒளிபரப்பு, இஸ்லாமிய அறிவை வளர்க்கும் விதமாக கேள்விபதில் நிகழ்ச்சிகள், திறமையானவர்களைக் கண்டறிந்து நேர்காணல்... இவ்வாறு பன்முகத் தன்மையுடன் இஸ்லாமிய போதனைகள் மக்களைச் சென்றடைகிறது.

அல்ஜன்னத்: இஸ்லாமிய போதனைகளுடன் முஸ்லிம்களுக்குள்ள தொடர்பு குறித்து உங்கள் பார்வை என்ன?

சகோதரர்: குர்ஆன், ஹதீஸ் என்ற முழக்கத்துடன் தவ்ஹீத் என்ற அடை மொழியில் வாழும் முஸ்லிம்கள் 80% தொழுகை போன்ற கடமைகளை நிறைவேற்றுநின்றனர். மற்ற முஸ்லிம்களோ இது விஷயத்தில் 25% மட்டுமே. இந்த ரமலானட முழுவதும் குர்ஆன் கேள்வி பதில் போட்டி ஒன்றை நடத்தினேன். தினமும் 30க்கும் அதிகமானவர்கள் தொலைக்காட்சியில் பதில் கூறுவார்கள். இந்நிகழ்ச்சியில் பிறந்தவுடன் பேசிய நபி யார்? என்ற கேள்விக்கு பதிலேதும் இல்லை. அதே போல் பெருநாள் தினத்தில் ஒரு கேள்வி: - ஸதக்கதுல் ஃபித்ர் எதற்காக? என்ற கேள்விக்கே பதில் இல்லை.
பெருநாள் தினத்துக்கு மறுநாள் ஆளூர் எனும் ஊரில் இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நான் ஸதகதுல் ஃபித்ர் எதற்காக என்ற கேள்வியைக் கேட்டேன். கிட்டத்தட்ட 300க்கும் அதிகமான மக்கள் கூட்டமிருந்த அந்த நிகழ்ச்சியிலும் யாரிடமும் பதில் இல்லை.

இஸ்லாமியர்கள் குர்ஆன், ஹதீஸ் வழியில் இஸ்லாத்தை விளங்க வேண்டும் அதுதான் வெற்றிக்கு வழி.

அல்ஜன்னத்: முஸ்லிம் இளைஞர்களுக்கு தாங்கள் கூறும் அறிவுரை என்ன?

சகோதரர்: முஸ்லிம் உம்மத்திற்கு இன்றைய அவசரத் தேவை இரண்டு விஷயங்கள்: 1. தமிழில் ஒரு இஸ்லாமிய சேனல் துவங்கப்பட வேண்டும். 2. ஒவ்வொரு முஹல்லாவிலும் பைத்துல் மால் எனும் நிதியத்தை துவங்கி தகுதியும், திறமையும் உள்ளவாஸகளுக்கு உதவித் தொகையாகவோ தொழில் கருவியாகவோ அல்லது கடனுதவிகளாகவோ வழங்கப்பட வேண்டும். இன்னபிற நிறுவனங்களையும் சார்ந்து இருப்பதை விட்டுவிட்டு முஸ்லிம் உம்மத் தனது சொந்தக் காலில் நிற்கும் நிலையை ஏற்படுத்த முன்வர வேண்டும்.

அபூ அப்திர்ரஹ்மான்

Sunday, November 30, 2008

நீங்கள் சமுதாய நல விரும்பிகளா?


பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.

நீங்கள் சமுதாய நல விரும்பிகளா? இதைப் படியுங்கள்.

அன்புள்ள சமுதாய நல விரும்பிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
வாழ்க்கையில் இழந்துவிட்ட நன்மைகளை ஈடு செய்ய, கோடிக்கணக்கான நன்மைகளை குறுகிய காலத்தில கொள்ளையடித்திட முஸ்லிம்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பே புனித ஹஜ் பயணம். ஓரு தொழுகைக்கு ஒரு லட்சம் தொழுகையைவிட அதிகமான நன்மைகள் கஃபதுல்லாவில் தொழுதால் கிடைக்கும். இது மாதிரி நன்மைகளை உலகில் வேறு எங்கு தொழுதாலும் அடைய முடியாது. இது கருத்து வேறுபாடின்றி அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும்.

அந்த ஒரு லட்சம் நன்மைகள்.

புனிதமான கஃபதுல்லாவுக்கு போகாமல் மக்காவில் எங்கு தொழுதாலும் எந்தப் பள்ளியில் தொழுதாலும் எந்த இடத்தில் தொழுதாலும் ரூமில் தொழுதாலும் அந்த ஒரு லட்சம் நன்மைகள் கிடைக்கும் என்று சொன்னால் யாராவது ஏற்றுக் கொள்வீர்களா? அது மட்டுமா? அப்படி அல்லாஹ் தராவிட்டால் அந்த ஒரு லட்சம் நன்மைகளை நான் வாங்கித் தருவேன் என்று ஒருவர் சொன்னால் ஜீரணிப்பீர்களா? இப்படி சொன்னது யார் தெரியுமா? துபையிலிருந்து சென்ற அல் இத்திஹாத் ஹஜ் சர்வீஸ் பொருப்பாளர்களில் ஒருவரான ஹுமாயூன் கபீர் அவர்கள்;தான்.

15 ஆண்டுகள் அனுபவம், 20 ஆண்டுகள் அனுபவம் என்று விளம்பரம் செய்த அனுபவசாலிகளெல்லாம்? சமுதாய நலன் கருதி? கூட்டணி அமைத்து ஓரணியாக செல்வதாக விளம்பரம் செய்தார்கள். 21-01-2004 புதன் காலை பயணம் இல்லை மதியம் அஸர், மஃரிபு, இஷh இப்படி இழுத்தடித்து புறப்படும் நேரங்களை மாற்றி மாற்றிக் கூறி 22 ஆம் தேதி மாலை 4 மணிக்கு புறப்பட்டார்கள். ந{ர் 1, 2, 3. என்று மூன்று (மதனி டிரான்ஸ் போர்ட்) பஸ்கள் புறப்பட்டன. இதில் ஹுமாயூன் கபீர் அவர்களை அமீராகக் கொண்ட 3 வது எண் பஸ்ஸிலிருந்து நேர்முக வர்ணனையை சுருக்கமாகத் தருகிறோம்.

ஸ்பீக்கரில் ஒலித்த (கண்ணியமான?) முதல் குரல்.

ஷஷஏம்பா எல்லாம் இங்க கவனி, அவன் அவன் பாஸ்போர்ட் அவனவன் கையில் இருக்கா? விஸா அடித்து இருக்கான்னு பாரு. பஸ் புறப்பட்டதும் ஹஜ் பயணிகபை; பார்த்து ஸ்பீக்கரில் ஒலித்த (கண்ணியமான?) முதல் குரல் இது. ஒரு ஹஜ் பயணி ஏதோ ஒரு விளக்கம் கேட்கிறார். யாருப்பா நீ, உன் வேலையைப் பாருப்பா நீ, நான் அமீரா? நீ அமீரா? இப்படி கனிவான? முறையில் பதில் கூறிய அமீர் பயான் செய்து கொண்டே வருகிறார். பஸ் ஓடிக் கொண்டே இருக்கிறது.

நீ எத்தனை வேலை தொழுகையை விட்டிருப்பே?

மஃரிபு நெருங்குகிறது அஸர் தொழாதவர்கள் இருக்கிறோம் பஸ்ஸை நிறுத்துங்கள் என்று சிலர் அமீரைப் பார்த்து கூறினார்கள். ஷஷநீ எத்தனை வேலை தொழுகையை விட்டிருப்பே? எனக்கு தெரியாதா? என்னவோ 5 நேரமும் ஜமாஅத்தோடு தொழுத மாதிரி என்ன அஸர் அஸருங்கிறே பேசாட்டு உட்காரு ஹஜ் பயணிகளின் அமீர் அளித்த பதில் இது. அபுதாபியிலிருந்து வரும் பயணிகளுக்காக மப்ரக்கில் குறுகிய ஆபத்தான ரோட்டில் பஸ் நிற்கிறது. ஏம்பா யாரும் இறங்கக் கூடாது என்ற உத்தரவுடன் அமீர் இறங்கி விடுகிறார். அஸர் தொழாதவர்கள் இறங்கி அஸர் தொழுது முடிக்கவும் மஃரிபு பாங்கு ஒலித்தது. மஃரிபுடன் இஷh ஜம்வு செய்ததும் புறப்பட்ட பஸ் இரவு 10 மணிக்கு டிரைவர்கள் சாப்பிடும் ரெஸ்ட்ராரண்டில் நின்றது.

11 மணிக்கு யு.ஏ.இ. பாடரில் நின்றதும் அமீர் இறங்கி போய் விடுகிறார். பெண்களெல்லாம் கால் வலிக்க உட்கார்ந்திருக்கிறார்கள். 11.45க்கு பஸ் புறப்படுகிறது. நமது நாட்டில் டவுண் பஸ்ஸில் கூட இவ்வளவு நேரம் நிற்கும் என கண்டக்டர் அறிவிப்பார்;. நீங்கள் ஒன்றும் சொல்லாமல் போய் விடுகிறீர்களே! என்று ஹஜ் பயணிகள் கேட்டார்கள். ஓட்டலில் நின்றால் சாப்பிடுவதற்கு, பெட்ரோல் பங்கில் நின்றால் பெட்ரோல் போட இதையெல்லாம் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? என்றார் அமீர்.

காணாமல் போன பாஸ்போர்ட்டுகள்.

சவூதி நேரம் 11 மணிக்கு சவூதி பாடரில் முதல் பஸ்ஸாக 3 ஆம் ந{ர் பஸ் நின்றது. யாரும் இறங்காதீர்கள் என்ற உத்தரவுடன் அமீர் போய் விட்டார். பிறகு வந்த ஒமான் பஸ்களெல்லாம் இமிகிரேஷன் கிளீயர் ஆகி போய் விட்டன. விடிய விடிய வயது முதிர்ந்தவர்கள், பெண்கள், சிறு குழந்தைகள் என அனைவரும் கடுங்குளிரில் நடுங்கித் தவித்தனர். அமீர் மட்டும் பள்ளிவாசலில் போய் படுத்து தூங்கி விட்டார். காலை 6 மணி ஆகியும் 3 ஆம் ந{ர் பஸ் செல்லவில்லை. இமிகிரேஷனில் பாஸ்போர்ட்டுகளே இல்லை என்ற பதில். பல கவுண்டர்களில் தேடிப் பார்த்த பின்னர் இரவு 1 மணிக்கே கிளியர் ஆகி உள்ளது. பல முறை அழைத்தும் பொறுப்பாளர் செல்லாததால் பாஸ்போர்ட்டுகள் ஓரங்கட்டப்பட்டதை பயணிகள் முயற்சியால் அறிந்தோம்.

நீ அமீரா? நான் அமீரா?

ஹஜ் பயணிகள் தங்குவதற்கு குளிரிலிருந்து பாதுகாப்பான பல கூடாரங்களை கழிப்பிட வசதியுடன் சவூதி அரசு அமைத்து உள்ளது. வழிகாட்டிகள் அமீர்கள் என்று கூறிக் கொண்டவர்கள் அனுபவித்தார்களே தவிர பயணிகளுக்கு வழிகாட்டவில்லை. திறந்த வெளி மணல் மேடுகளைத்தான் கழிப்பிடங்களாக பலர் பயன் படுத்தினர். காலை நாஷ;ட் டாவுக்காக டிரைவர்கள் சாப்பிடும் ரெஸ்ட்ராரண்டில் நின்றது. அப்பொழுது மணி 10-30 இருக்கும். 3ஆம் ந{ர் பஸ் அமீர் ஷஎல்லோரும் லுஹர் அஸர் ஜம்வு கஸர் தொழுங்கள் என்கிறார். வக்து வரவில்லையே என்று கேட்டவர்களிடம் ஷநீ அமீரா? நான் அமீரா? பேசாம உன் வேலையைப் பாருப்பா என்கிறார். அமீர் சொல்படி சிலர் தொழுதனர். மிகுந்த கூச்சல் குழப்பத்திற்குப் பிறகு சரி வண்டிக்கு போங்கப்பா என்கிறார்.

பஸ் போய்க் கொண்N;ட இருக்கிறது. யாராவது பசிக்கிறது என்றால் யா அல்லாஹ் இவரது பசியை போக்குவாயாக! என்பார். பாத் ரூம் போகணும் என்றால் யா அல்லாஹ் இவரது பாத் ரூம் தேவையை பூர்த்தி செய்வாயாக என்பார். இது மாதிரி பதில்களால் வெறுத்துப் போன ஹஜ் பயணிகள் ஒவ்வொருவரும் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் அமீருடன் சண்டை போட்டுக் கொண்டே இருந்தார்கள். மதிய உணவு இன்றி ரியாத்-அல்மாஸியா சென்றடைய மஃரிபு ஆனது. அங்கு முத்துப் பேட்டை நஜ்முத்தீனின் தமிழ்நாடு உணவகத்தில் சாப்பிட்டார்கள். சுபுஹுக்கு முன் மீகாத் சென்றடைந்தது பஸ்.

மக்காவை வரக் காணோம்!

சுபுஹு தொழுது இஹ்ராம் ஆனார்கள். அதற்குப் பிறகு புறப்பட்ட பஸ் சுற்றி சுற்றி ஓடிக் கொண்டே இருக்கிறது மக்காவை வரக் காணோம்! பஸ் டிரைவர்கள் இஹ்ராம் ஆடை அணியாததால் நமது 3 பஸ்களை போலீஸ் விடவில்லை என்றார்கள். இஹ்ராம் ஆடை அணியாத டிரைவர்களுடன் மற்ற பஸ்கள் செல்வதைக் கண்ணால் கண்டும், நம் அமீர்கள் வாய் திறந்தால் உண்மைதானே பேசுவார்கள்? என்ற நம்பிக்கையில்? இருந்தார்கள்.

குறிக்கோலில் வெற்றி கண்டு விட்ட அமீர்கள்.

பிறகு வேறு 3 மதனி பஸ்கள் வந்தன. அதில் ஏறுமாறு அமீர்கள்; கட்டளை இட்டனர். தலை விதி என வெறுப்புடன் இஹ்ராமான எல்லாரும் வாய் மூடி இறங்கி ஏறினர். சாமான்களை இறக்கி ஏற்றினர். அந்த டிரைவர்களும் இஹ்ராம் ஆகவில்லை பேண்ட்-ஷர்ட் போட்டிருந்தனர். ஆனால் மக்கா எல்கைக்குள் பஸ் சென்றது. மக்கா எல்கைக்குள் வெளிப் பகுதி பஸ்கள் நுழைய ஒரு குறிப்பிட்ட கட்டணம் செலுத்த வேண்டும். அதை செலுத்தாமல் நுழைய பல வழிகளில் முயன்றுள்ளனர். முடியாமல் போனதும் மக்கா எல்கைக்குள் ஓடும் மதனி டிரான்ஸ் போர்ட்டின் பஸ்களை கொண்டு வரச் செய்துள்ளனர். ஆக மக்கா எல்கைக்குரிய நுழைவு கட்டணம் செலுத்தாமல் செல்ல வேண்டும் என்ற குறிக்கோலில் வெற்றி கண்டு விட்டனர் நம் அமீர்கள்.

எஜமான் பட காதல் பாட்டு

லுஹருக்கு மக்கா சென்றடைந்தும் ஹரமுக்குச் சென்று உம்ராவை நிறைவேற்றாமல் சாமான்களை இறக்கி ரூம்களில் ஏற்றக் கூறினர். 4 கி.மீ. தொலைவில் உள்ள ரூமில் இருந்து நடந்து நடந்து ஹரம் சென்றும் நடந்து கொண்டிருந்த அஸர் ஜமாஅத்தில் சேரவிடவில்லை. 5 மணிக்கு வெளிப் பள்ளியில் அஸர் தொழ வைத்தார். பூமியிலிருந்து வானத்தை பிரித்ததும் பூமி ஆடியது. உடன் அல்லாஹ் மலைகளை ஊன்றினான் ஆட்டம் நின்றது. அப்பொழுது ஊன்றிய முதலாவது மலைதான் இதோ இருக்கும் அபூ குபைஸ் மலை என சப்தமாக டி.வி. பாணியில் அதிய? தகவல்களை பயான்களாக கூறிக் கொண்டிருந்தார்.

நடராஜர் யார் தெரியுமா? அவர்தான் ஆதம் (அலை) என்பன போன்றவைகளை பயானாகக் கூறியதையும், ஷஎஜமான் படத்தில் வரும் ஷஒரு நாளும் உனை மறவாத .. என்ற காதல் பாட்டை கஃபாவை நோக்கி நின்று பாடியதாகக் கூறி பெருமைபட்டதையும் ஏற்கனவே செவிமடுத்தவர்கள் இவரது உரைகளை புறக்கணித்தனர். இப்படியாக மஃரிபு, இஷh முடிந்தும் உம்ராவை நிறைவேற்ற விடாமல் காலம் தாழ்த்தினார்.

கஃபாவில் முட்டியால் இடித்து தள்ள வேண்டும்?

வலம் வரும்போது எல்லாரும் கைகளை கோர்த்துக் கொள்ள வேண்டும். யாராவது நுழைந்தால் முட்டியால் இடித்து தள்ள வேண்டும். என்பன போன்ற (அழகிய?) மார்க்க உபதேசங்களைக் கூறினார். சுபுஹுவில் இஹ்ராம் ஆனவர்கள் உம்ரா செய்து முடிக்க இரவு 12 மணி ஆனது. ரூம் வசதிகள் பற்றி சவூதி அரசு அதிகாரிகள் பார்வையிட ரூமுக்கு வந்துள்ளார்கள். அப்பொழுது பயணிகள் இருந்தால் 30 பேர் தங்குகிற இடத்தில் 50 பேர் அடைக்கப்பட்டுள்ளது தெரிந்து விடும். எனவே இவ்வளவு காலம் தாழ்த்தி உள்ளார்.

21 நாள் பயணத்தில் சாப்பாட்டுக்கு என்று 350 திர்ஹங்கள் வீதம் வாங்கி உள்ளனர். வழியில் சாப்பாடு இல்லை என்றனர். மக்கா சென்றும் சாப்பாடு இல்லை. சாப்பாடு கேட்டால், ஷஇருந்தால் சாப்பிடு இல்லாவிட்டால் பேசாமல் இரு என்றார். ஏன் சாப்பாட்டுக்கு காசு வாங்கவில்லையா என்றதற்கு அப்படித்தான் என்ன செய்ய முடியுமோ செய் நோட்டீஸ் போடுவியா? போடு. பத்தாயிரம் நோட்டீஸுக்கு நான் காசு தாரேன். எஹ்யா, தாவூதிடம் சொல்லி விட்டேன் அவர்கள் உங்கள் சாப்பாட்டுக்கு எந்த பதிலும் சொல்லவில்லை என்றார். பசியால் சண்டை போடுபவர்கள் எண்ணிக்கை கூடியதும், ஷஎத்தனை நாள் சாப்பாடு கிடைக்கவில்லையோ அதற்குரிய பணம் திரும்ப தருவோம். உங்கள் செலவை எழுதி வையுங்கள். சராசரி 200 திர்ஹங்கள் தருவோம் என்று 3ஆம் ந{ர் பஸ் அமீர் ஹுமான் கபீர் கூறினார்.

ஹுமாயூன் இல்லாத நேரத்தில் 2 ஆம் ந{ர் பஸ் அமீர் எஹ்யா ஹஜ்ரத் வந்தார். அவரிடம் ஹஜ் பயணிகளுக்குரிய அடையாள அட்டைகள் எங்களுக்கு கிடைக்கவில்லை. எங்களை போலீஸ் பிடித்தால் என்ன செய்ய என்று முறையிட்டனர். எங்கே ஹுமாயூனை? பாஸ்போர்ட்களை முஅல்லிமிடம் கொடுத்தால்தான் மினா, அரபாத்தில் கூடாரம் கிடைக்கும் அதற்குரிய டோக்கன்களும் கிடைக்கும். அவர் செய்யாவிட்டால் என்னிடம் தந்தால் நானாவது செய்வேன் என்றார். எல்லாரும் ஹுமாயூன் பற்றிய குறைகளைக் கூறினர். 27 ஆம் தேதியிலருந்து ஏனோ தானோ சாப்பாடு போட்டார்கள். அதுவும் தொடராக அல்ல திடீரென காலை நாஷ;ட்டா இல்லை என்பர். திடீரென மதிய உணவு இல்லை என்பர்.

எத்தனை ஜமாஅத்தை ஊரில் விட்டிருப்பே?

28 ஆம் தேதி சுபுஹுக்குப்பின் ஜியாரத் என்றார்கள். 11 மணிக்குத்தான் பஸ் வந்தது. இப்பொழுது போனால் எப்படி லுஹர் ஜமாஅத் கிடைக்கும் என்று கேட்டனர். எத்தனை ஜமாஅத்தை ஊரில் விட்டிருப்பே, என்னைக்காவது சுபுஹுவை ஜமாஅத்தோடு தொழுது இருப்பியா? என்றார் ஹுமாயூன். தொழுகை சம்பந்தமாக பேசும்போதெல்லாம் இது மாதிரிதான் மக்காவிலும் மதினாவிலும் பதில் கூறி ஹஜ் பயணிகளின் மனதை நோகடித்தார். மக்காவில் எங்கு தொழுதாலும் எந்த பள்ளியில் தொழுதாலும் எந்த இடத்தில் தொழுதாலும் ரூமில் தொழுதாலும் ஒரு லட்சம் நன்மைகள் கிடைக்கும். அப்படி அல்லாஹ் தராவிட்டால் அந்த ஒரு லட்சம் நன்மைகளை நான் வாங்கித் தருவேன் என்று ஜியாரத்தின்போது தவ்ர் குகை மலை அடிவாரத்தில் நின்று கூறினார்.

மார்க்கத்தை விடுங்க, உங்க விருப்பத்தைச் சொல்லுங்க.

மினாவுக்கு பிறை 7 இஷh தொழுதவுடன் போகிறீர்களா? ஜும்ஆவுக்குப் பிறகு போகிறீர்களா? நடந்து போகிறீர்களா? என்று தனித்தனியாகக் கேட்டார். மார்க்கம் என்ன சொல்கிறது அதன்படி நடப்போம் என்றால், மார்க்கத்தை விடுங்க உங்க விருப்பத்தைச் சொல்லுங்க என்றார். மார்க்கப்படிதானே நடக்கனும் என்று குறுக்கிட்டு பேசிய மற்றவர்களை உன்னிடம் யார் கேட்டா? உன்னிடம் கேட்டால் நீ பதில் சொல் என பேச விடாமல் வாயை அடைத்தார். மரியாதையாகப் பேசு, நீ - நீ என என்ன மரியாதை இல்லாமல் பேசுகிறாய். உன் தகப்பன் வயதில் உள்ளவர்களும் இருக்கிறோம் இப்படியாக பல முறை நடந்த சண்டை ஜியாரத்தின் போது உச்சகட்டத்தை அடைந்து பஸ் ஆடியது.

இது ஒரு கூட்டு நாடகம்.

29 ஆம் தேதி யஹ்யா ஹஜ்ரத் வந்து வித்தியாசமான விசிட்டிங் கார்டுகளைக் கொடுத்தார். எங்கே ஹாஜிகளுக்குரிய அடையாள அட்டை? எங்கே மினா கூடார அட்டை என்றதற்கு, இதுதான் அரபி தந்தான் என்றார். ஒரே சண்டையும் கூச்சல் குழப்பமுமானது. ஹாஜிகளுக்குரிய அடையாள அட்டை எங்கே என யஹ்யா ஹஜ்ரத்திடம் போய் கேளுங்கள் என்று 3 ஆம் ந{ர் பஸ் பயணிகளை ஹுமாயூன் தூண்டி விட்டுக் கொண்டிருந்தார். இதை கவனித்து பார்த்தவர்கள் இது ஒரு கூட்டு நாடகம் என விளங்கிக் கொண்டார்கள்.

ஹஜ்ஜாளிகளுக்கு சக்தி மாத்திரை?

ஒவ்வொரு வக்துக்கும் 4 கி.மீ. தூரம் நடந்து நடந்து அசதியாகி பல நோய்களுக்கு உள்ளாகி விட்டார்கள். பிறை 7 அன்று ஷநாளை மினா செல்ல இருப்பதால் சக்தி மாத்திரை சாப்பிடுங்கள். ஆண்களுக்கு 3 பெண்களுக்கு 2 குழந்தைகளுக்க 1 என ஹுமாயூன் கொடுத்தார். நம்பிக்கையுடன் சாப்பிட்டவர்கள் நிரந்தரமாக கக்கூஸில் இருந்தார்கள். அவர் கொடுத்தது பேதி மாத்திரை. யாரும் நல்ல சாப்பாடு கேட்கக் கூடாது. அவர்கள் தரும் லெமூன் சாதமே கதி என இருக்கணும் என்பதற்காக செய்த சதி இது.

லேபிலை கிளித்து மாத்திரையை மட்டும் கையில் கொடுத்து வாயில் போடுங்கள் என்றே கொடுத்தார். பிறகு சாப்பிடுகிறேன் என்று வைத்தவர்கள் தப்பினார்கள். ஒரு மூதாட்டி சீரியஸ் ஆகி அஸரிலிருந்து இஷh வரை நினைவற்றுப் போனார். பாதிக்கப்பட்டவர்கள் என்னங்க சக்தி மாத்திரைன்னு பேதி மாத்திரை தந்து விட்டீர்கள். ஒரே வயிற்றுப் போக்கால் நிற்க முடியவில்லை என்று கேட்டதற்கு, ஷவயிறு சுத்தமாகி விட்டதில்ல போங்க என்று சாதரணமாக பதில் சொன்னார்.

மினாவில் தங்க தேவை இல்லை?

தாவூத் அலி ஹஜ்ரத், யஹ்யா ஹஜ்ரத் பொறுப்பில் உள்ள பெரும்பாலானவர்களை பிறை 7 இஷhவுக்குப்பின் மினா அழைத்துச் சென்று விட்டனர். அதில் 6 பேர் மட்டும் மாhக்க அடிப்படையில் சுபுஹுக்குப்பின் புறப்பட்டுள்ளனர். பிறை 8ல் மட:;டும் மினாவில் தங்கினால் போதும். 10,11,12களில் மக்காவில் உள்ள ரூம்களில் தங்கி விட்டு மினாவில் கல் எறிந்தால் போதும் என்ற புதிய சட்டத்தை 3 அமீர்களும் கூறினார்கள். பிறை 8 அன்று காலை 10 மணி ஆனது. வாங்க மினா போவோம் நேரம் ஆகுது என ஒருவர் சொன்னார். அவரைப் பார்த்து ஹுமாயூன், ஷஉன் வேலையைப் பார்த்துப் போ என விரட்டினார். பிறகு எல்லாருக்கும் ஹஜ் நிய்யத்? சொல்லிக் கொடுத்தார். பிறகு இதோ இதோ என 2 கி.மீ. நடத்திச் சென்றார். 20 சீட் உடைய மினி பஸ்ஸை பிடித்து 50 பேரை ஏறச் சொன்னார். பெண்களையும் வேன் டாப்பில் ஏறச் சொன்னார். சிறிய சண்டைக்குப் பிறகு வேறு வேன் பிடித்தார்.

ஹுமாயூனை வரச் சொல்கிறேன்.

மினாவில் போய் கூடாரம் தெரியவில்லை என 1-30மணி நேரம் அங்கும் இங்குமாக நடக்க வைத்தார். பிறகு ஒரு இடத்தில் நிற்க வைத்து 2 மணிக்கு 20 மஞ்சல் கயிறு அட்டையை தந்து 20 பேரை 17 ஆம் ந{ர் கூடாரத்திற்கு போகச் சொன்னார். பிறகு 10 பிறகு10 பிறகு 10 என எல்லாரும் கூடாரத்திற்குள் நுழைந்தோம். பெண்களை தாவூத் அலி ஹஜ்ரத் அழைத்துச் சென்று ஒரு கூடாரத்தில் நுழையச் சொன்னார். நுழைந்த வேகத்தில் பெண்கள் திரும்ப வந்து கால் வைக்க இடமில்லை என்றனர். அட்ஜஸ் பண்ணி இருங்கள் என்றார். பெண்களுக்கும் தாவூத் அலி ஹஜ்ரத்துக்கும் சிறிது விவாதம் நடந்தது. ஹுமாயூனை வரச் சொல்கிறேன் என்று தாவூத் போய் விட்டார். ஹுமாயூன் வந்து அவருக்கே உரிய அடாவடித்தனமானப் பேச்சால் பெண்களை நிர்ப்பந்தமாக உள்ளே போகச் செய்தார்.

அமீராக ஹுமாயூன் வர வேண்டாம்.

முந்தைய நாளில் எஞ்சிய புரோட்டாவை முதலில் கொடுத்தார்கள். பிறகு முந்தைய நாளில் தயாரித்த எலுமிச்சை சாப்பாடு கிடைத்தது. நமது கூடாரம் என்று எண்ணி உரிமையுடன் நுழைந்த ஆண்கள் பகுதியில் நெருக்கடி அதிகமானது. ஜும்ஆ முபாரக் என்ற அரபி வந்து யா ஹைவான் -- - - என (பெயர் சொல்லி) கூப்பிபட்டார்? வொய்ன் ஹாதா ஹைவான் என சப்தம் போட்டார் அமீர்கள் தலைமறைவாகி விட்டனர். 50 பேர்களுக்கு மட்டும் கூடாரம் எடுத்து விட்டு 150 பேர்களை நுழைத்துள்ளனர். இரவில் வந்தவர்கள் கழுத்தில் போட்டிருந்த மஞ்சல் கயிறு அட்டைகளை கழட்டி வாங்கி வந்து 3 ஆம் ந{ர் பஸ் ஆட்கள் கழுத்தில் மாட்டி விட்டு கூடார நுழைவாயில் பொறுப்பாளர்களை ஏமாற்றியுள்ளனர் என்று பிறகுதான் விளங்கியது. இந்த கூடாரத்தில் தங்க முடியாது என்றானதும் வேறு கூடாரம் உள்ளது என்றனர். ஆக 3 பேரும் சேர்ந்துதான் வியாபார நோக்குடன் செயல்படுகின்றனர். இதை புரியாதவர்கள் எங்களுக்கு அமீராக ஹுமாயூன் வர வேண்டாம் என்றனர்.

யஹ்யா ஹஜ்ரத்தை அமீராக ஏற்று வேறு கூடாரம் நோக்கி சென்றோம். சென்றோம், சென்றோம் சென்று கொண்டே இருந்தோம். மினா முடிந்தது என்ற போர்டைத் தாண்டி முஜ்தலிபா என்று போர்டு உள்ள பகுதியின் கூடாரத்தில் விட்டார். முஜ்தலிபா என்று போர்டு உள்ளதே என்று கேட்டதற்கு இதை மினாவாக அரசாங்கம் ஆக்கி உள்ளது என்று யஹ்யா ஹஜ்ரத் கூறினார். பெரும்பாலானவர்கள் நடந்து நடந்து நோயாளிகளாக ஆகி விட்டார்கள். வழக்கமான போராட்டத்திற்குப் பிறகு இரவு உணவாக காய்ந்த குபுஸ் கிடைத்தது.

இஹ்ராம் ஆடை பற்றிய புதிய விளக்கம்.

கந்தூரா அணிந்து கொண்டு மினாவில் தங்கிய ஹுமாயூன். ஷஇதுதான் இஹ்ராம் ஆடை என்று கூறி, இஹ்ராம் ஆடை என்றால் தூய்மையான ஆடை என்பதுதான் பொருள். ரசூலுல்லா காலத்தில் தையல் மிஷpன் கிடையாது எனவே தைக்கப்படாத 2 ஆடை அணிந்தார்கள் என்று யாரும் கேள்விப்படாத புதுமையான விளக்கங்களை மினாவில் கூறிக் கொண்டிருந்தார்.

பிறை 9 ல் அரபா செல்ல காலை 4 மணிக்கே பஸ் பிடிக்க சென்றதாக கூறினார்கள். இதோ இதோ என காலை 9மணி ஆகியும் பஸ் வரவில்லை. எல்லா கூடாரத்திலுள்ளவர்களும் காலியாகி சென்று விட்டனர். 9.30க்கு வந்த யஹ்யா ஹஜ்ரத் ஷசுபுஹு தொழுதவுடன் சென்ற இன்ன இன்ன குரூப் பஸ்களெல்லாம் இன்னும் அரபா சென்று சேரவில்லை. டிராபிக் ஜாமில் மாட்டிக் கொண்டுள்ளது. நாம் லேட்டாகப் போய் எளிதில் சேர்ந்து விடுவோம் என்று கூறிய ஆறுதல் வார்த்தைகளை நம்பினோம். முதலில் பஸ் கூடார வாசலுக்கு வரும் என்றார். பிறகு மெயின் ரோடு நோக்கி நடக்கக் கூறினார் நடந்தோம்.

10.30 மணிக்கு வந்த பஸ் அரபா சென்றடைய 2-30 மணி ஆனது. கூடாரம் சென்று அடையவில்லை. நடு ரோட்டில் இறக்கி விட்டார்கள். காலை நாஷ;ட்டா இன்றி மதிய உணவும் இன்றி பசியுடன் லுஹர், அஸர் தொழுதார்கள். கூடாரம் சென்றடை அரை மணி நேரம் நடக்கணும் என்றார்கள். சரி என நடந்தோம் அங்கும் இங்குமாக நடை நடை என நடக்க வைத்தார்கள். 4 மணிக்கு கூடாரம் சென்று அடைந்தோம். அதே ஜும்ஆ முபாரக் கூடாரம்தான்.

தாவூத் அலி ஹஜ்ரத் அவர்கள் கொடுத்த உணவு.

தாவூத் அலி ஹஜ்ரத் அவர்கள் மதிய உணவு பொட்டலங்களை வினியோகித்தார். கொஞ்ச நேரம்தான் உள்ளது வணக்கத்தில் ஈடுபடணும் என சிலர் வாங்க மறுத்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். சிலர் ஹஜ்ரத் தருகிறார் என வாங்கி ஓரமாக வைத்தனர். பசியால் மயக்க நிலைக்குச் சென்றவர்கள் ஆவலுடன் பெற்று பொட்டலத்தை பிரித்தனர் கெட்டுப்போன உணவு துர்நாற்றம் அடித்தது. ஷஎன்ன ஹஜ்ரத் கெட்டுப் போய் இருக்கு? ஷஅப்படியா வேறு பொட்டலம் பிடியுங்கள் என்றார். அதிலும் அதே வாடை. ஆம் பிறை 7 ல் தயாரித்த எலுமிச்சை சோற்றைத்தான் பிறை 9ல் அரபாவில் 3ஆம் ந{ர் பஸ் ஆட்களுக்கு கொடுத்தார்கள். அவர்கள் என்ன ஓசியிலா வந்தார்கள். 3,500 - 3800-4500 திர்ஹங்கள் வரை கொடுத்துத்தான் வந்தார்கள். அவர்களுக்குத்தான் இந்த கதி. நேரடியாக ஜும்ஆ முபாரக்கிடம் பணம் கொடுத்தவர்கள் 2500 திர்ஹங்கள் மட்டுமே கொடுத்துள்ளனர்.

இது உங்கள் கூடாரமே இல்லை எப்படி சாப்பாடு கிடைக்கும்?

கூடாரம் வர 4 மணி ஆகிவிட்டதே! என்று வருந்தியவர்களிடம் 4மணிக்குப் பிறகுதான் துஆ கபூல் ஆகும் நேரம் என்று கூறி கந்தூராவை கழட்டி விட்டு தைக்கப்படாத 2 ஆடைகளுடன் வந்தார் ஹுமாயூன். அரபாவில் முஅல்லிம் சாப்பாடு என்று நேற்று எஹ்யா ஹஜ்ரத் கூறினார். எங்கே எங்கள் சாப்பாடு? என்று கேட்டதற்கு, இது உங்கள் கூடாரமே இல்லை எப்படி சாப்பாடு கிடைக்கும் என்றார் ஹுமாயூன். 12 மணிக்கு முன்பாக வந்தால் கூடாரத்திற்கு பணம் கட்டப்படாதவர்கள் நுழைய முடியாது. எனவே 4 மணிக்குப் பிறகு ஜியாரத் அடிப்படையில் இங்கு கொண்டு வரப்பட்டு ஏமாற்றப்பட்டார்கள். ஆக 3 ஆம் ந{ர் ஆட்களுக்கு அரபாவிலும் கூடாரம் கிடையாது.

மினாவா? முஜ்தலிபாவா?

மஃரிபு ஆனதும் மற்ற கூடாரங்களில் உள்ள எல்லாரும் முஜ்தலிபா சென்றார்கள். 9 மணி ஆகியும் அரபாவை விட்டு கிளம்பவில்லை. ஒருவருக்கு 10 ரியால் 8 ரியால் 5 ரியால் இப்படியாகக் குறைந்து 2 ரியாலுக்கு வந்ததும் புறப்பட்டார்கள். இலவச பஸ்ஸில் 3 ஆம் ந{ர் ஆட்கள் ஏற்றப்பட்டார்கள் அமீராக ஹுமாயூன் வந்தார். இரவு 3மணிக்கு நடு வழியில் இறக்கி விட்டார்கள். அங்கு மஃரிபு, இஷh தொழுது விட்டு நடந்து நடந்து மினா என்று நாங்கள் தங்க வைக்கப்பட்ட கூடாரத்திற்கே கொண்டு வந்து விட்டார் அமீர் ஹுமாயூன். என்னங்க முஜ்தலிபாவில் சுபுஹு தொழுது விட்டுத்தானே மினா வரணும்? முன்னதாக கூட்டி வந்து விட்டீர்களே! என்று கேட்கப்பட்டது. இதை யார் மினா என்றார்கள்? இதுதான் முஜ்தலிபா என்றார் அமீர் ஹுமாயூன்.

ஒழுங்கான வழிகாட்டுதல் இல்லாமல் மினா, கஃபா அங்கிருந்து 4 கி.மீ தூரமுள்ள ரூம் பிறகு கஃபா, மினா இப்படியாக நாங்கள் நடந்து சீரழிந்து கொண்டிருந்தோம். இந்த பாதிப்பின் உச்ச கட்டம் பிறை 12 காலையில் கூடாரம் கொந்தளிப்பால் குலுங்கி காட்சிப் பொருளாகியது. யஹ்யா ஹஜ்ரத்திடம் ஒவ்வொருவரும் போட்ட சப்தத்தில் சுற்றி உள்ளவர்களெல்லாம் வந்து வேடிக்கை பார்த்தார்கள். விபரங்களை கேட்டுவிட்டு அவர்கள் வெட்கித்தார்கள். யஹ்யா ஹஜ்ரத்திடம் ஆயிரம் திர்ஹங்கள் வீதம் நஷ;ட ஈடு தரணும் என்றார்கள். ஒழுங்காக சாப்பாடு தராத வகைக்கு 200 திர்ஹம் வீதம் திரும்ப தருகிறோம் என்றார்.

மினாவில் கூடாரம் போட்டு தங்குவது ஏன்?

10,11,12களில் மினாவில் கூடாரம் போட்டு தங்க சொன்னது -- -- அரபிகள் இல்லறம் கொள்ளத்தான் எனவே மற்றவர்கள் மக்காவில் தங்கலாம் என்று விளக்க உரை வழங்கினார் ஹுமாயூன். குர்பானி கொடுக்க வேண்டியதில்லை. தவாபுல்விதா போன்றவை செய்ய வேண்டியதில்லை என்பன போன்ற நூதன விளக்கங்களை ஹுமாயூன் தரப்பில் கூறிக் கொண்டிருந்தார். பிறை 12 அன்றே தவாபுல்விதாவும் செய்துவிட்டு மதீனா செல்ல தயாரகச் சொன்னார்கள்.

இதோ பஸ் அதோ பஸ் என கஃபா சென்று தொழ முடியாத வண்ணம் ஒரு நாளை வீணடித்தார்கள். பிறை 14 வியாழன் காலை 12 மணிக்கு அமீர் ஹுமாயூன் கொண்டு வந்த பஸ் மஸ்ஜித் ஆயிஷh போய் நின்றது. லுஹர்,அஸர் ஜம்வு தொழுகை முடிந்து மணி 2 ஆகியும் பஸ் புறப்படவில்லை. பசித்தவர்கள் சாப்பாடு கேட்டதற்கு புத்தகத்தை படியுங்கள் என்றார். பள்ளிவாசலில் சண்டை களை கட்டியது. பாஸ்போர்ட்கள் தாவூத், யஹ்யா வண்டியில் உள்ளது. அந்த வண்டிகள் வந்துதான் போக முடியும் என்றார். கூட்டுக் கொள்ளையர்கள்., சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர்களைவிட கேடுகெட்டவர்கள். இப்படியாக ஹிந்தி, இங்லீஷ; என பல மொழிகளில் ஹுமாயூனையும் மற்ற அமீர்களையும் திட்டினார்கள். மஸ்ஜித் ஆயிஷhவே ஸ்தம்பித்தது.

ஹுமாயூன் போய் யஹ்யாவும் போய் தாவூத் அலி ஹஜ்ரத் அமீராக வந்தார். பஸ் புறப்பட்டது பயண துஆவை சொல்லிக் கொடுத்தார். பக்கத்தில் உள்ளவர்களைப் பார்த்து சிரியுங்கள். பக்கத்தில் ஆள் இல்லாவிட்டால் வானத்தைப் பார்த்து சிரியுங்கள் என்றார். 150 கி.மீ. தூரத்தில் உள்ள ஓட்டலில் சாப்பாட்டுக்காக பஸ் நிற்கும் என்றார். இரவு 11 மணிக்கு மதீனாவில்தான் சாப்பாடு கிடைத்தது.

நீங்கள் ஆலிம் மற்றவனாக இருந்தால்?

சாப்பாடுகளெல்லாம் ஏனோதானோ என்றிருந்தது. வெந்ததையும் வேகாததையும் விதி என சாப்பிட்டார்கள். ஒரு நாள் காலை வந்த புரோட்டா பார்த்ததும் வாமிட் வரச் செய்தது. வெறுத்துப் போனவர்கள் தாவூத் அலி ஹஜ்ரத்திடம் சண்டை போட்டார்கள். -- கிறுக்கன் மடையன் முட்டாள் அவனைப் பார்த்து பேசுவதும் சரி சுவரைப் பார்த்து பேசுவதும் சரி எனவே அவன் வேண்டாம் என ஆலிம்ஸாக்களான உங்களை அமீராக ஏற்றோம். நீங்கள் இப்படி நடக்கலாமா? என்று ஆளுக்கொருவிதமாக கடுமையான வார்த்தைகளால் சப்பதம் போட்டார்கள். (தாவூத் அலி ஹஜ்ரத்தாகிய) நீங்கள் அரபாத்தில் கெட்டுப் போன சோற்றைத் தந்தீர்கள். நீங்கள் ஆலிம் என்பதால் மரியாதைக்காக விட்டேன். மற்றவனாக இருந்தால்? -- இந்த செருப்பால் அடித்திருப்பேன் என்று காலில் கிடந்த தடித்தச் செருப்பைக் காட்டினார். புதிய நாஷ;ட்டாவாக மக்ரோரினி கிடைத்தது. 13 ஆம் தேதி மதியம் வந்த சாப்பாட்டைப் பிடித்த சவூதி அதிகாரிகள், இதையா ஹாஜிகள் சாப்பிடுகிறீர்கள்? என்று கேட்டனர். சாப்பாட்டின் தரம் அப்படி இருந்தது. சாப்பாடு கொண்டு வந்த பங்காளியை பிடித்துச் சென்றனர்.

பிரயாணிகளுக்கு ஜும்ஆ கடமை இல்லை என்று கூறி மதீனாவில் ஜும்ஆ தொழாமல் ரூமில் படுத்துக் கொண்ட ஹுமாயூன், பள்ளிக்குப் போகத் தேவை இல்லை என பிறரையும் கெடுத்தார். ஷமதீனாவில் ரசூலுல்லாவுக்கு (ஸல்) அடுத்து அபூபக்கர் (ரலி) அடுத்து உமர்(ரலி) அடங்கப்பட்டுள்ளார்கள். அடுத்து ஒரு இடம் கியாம நாளில் வரும் ஈஸா (அலை) அவர்கட்கு அதற்கு அடுத்து உள்ள இடம் யாருக்கு தெரியுமா? அதுதான் இந்த ஹுமாயூனுக்கு என்றார். ஷஏங்க இப்படி சொல்லலாமா? என்று கேட்டதற்கு ஷநான் அங்கு அடங்க ஆசைப்படுகிறேன் என்று கூறிக்கொண்டிருந்தார். மார்க்க கடமைகளை மார்க்க ரீதியாகச் சொல்லாமல் ஏம்பா அந்த பள்ளியில் போய் 2 ரகஅத் தொழு. இந்த பள்ளியில் 2 ரகஅத் தொழு என கட்டளையாகக் கூறி வந்தார்.

துபை திரும்பும் நாள் பற்றி பலவிதமான தகவலை பரவவிட்டு 13 ஆம் தேதி வெள்ளி இஷhவுக்குப் பின் என்று உறுதி செய்தனர். தங்க வைத்த ரூம் 12 ஆம்தேதி வரை எடுக்கப்பட்டுள்ளது என்பதை கடைசி நாள் வரை மறைத்தனர். இன்று காலி செய்ய வேண்டும் என்று ஹுமாயூன் ஒரு ரூமில் போய் கூறுகிறார். எங்கே? தாவூத் யஹ்யா என்று கேட்டதற்கு வேறு பில்டிங்கில் இருக்கிறார்கள் நான்தான் உங்களுக்கு தகவலாக கூறுகிறேன் என்று கூறி உள்ளார். ஒழுங்கான சாப்பாடு இல்லை சர்வீஸ் இல்லை பணத்தை திருப்பி கொடுங்கள்; என ஹுமாயூனை விரட்டிச் செல்ல லிப்டில் ஹுமாயூனை எதிர் நோக்கி தாவூத் யஹ்யா நின்றுள்ளனர்.

இன்னொரு ரூமில் போய் இதே மாதிரி ஹுமாயூன் தகவலாக சொல்வதாக கூறி உள்ளார். அவர்களும் எங்கே? தாவூத் யஹ்யா என கேட்க, இல்லை என கூறி உள்ளார். அங்கு உள்ளவர்கள் ஹுமாயூனுடன் சண்டை போட சப்தம் அதிமாகவே வெளியே நின்ற தாவூத் கதவை திறந்து ஹுமாயூனை கூட்டிச் சென்றுள்ளார். மூன்று பேரும் கூட்டுதான் என்பதை எவ்லாரும் விளங்கிக் கொண்டனர். முந்தைய ஆண்டுகளில் ஒரு நாள் 2 நாள்கள் ரோட்டில் தங்க வைக்கப்பட்டதை அறிந்தோம். எல்லாரும் கூடி மஷ{ரா செய்து வேறு ரூம் எடுத்து தந்தால்தான் இருக்கும் ரூம்பை விட்டு காலி செய்வோம் என்றோம். ஒரு நாளுக்காக வேறு ரூமுக்கு சென்றோம்.

இப்படியாக அங்கும் இங்குமாக அலைக்கழிக்கப்பட்டவர்களுக்கு துபை திரும்பும்போதும் நிம்மதி இல்லை. சிறிய பஸ்ஸைக் கொண்டு வந்து நடக்க முடியாத வண்ணம் நடை பாதை முழுவதும் சீட்டு உயரத்திற்கு தண்ணீர் கேன்கள் வைக்கப்பட்டன. ஆண்கள் கேன்கள் மீது ஏறி நடந்து விடலாம் பெண்கள்? பெண்களும் ஏறி நடந்தார்கள். இதைப் பற்றி கூட சிந்திக்காத ஹஜ் சர்வீஸ்தான் அல் இத்திஹாத் ஹஜ் சர்வீஸ். துபையிலிருந்து வந்த பஸ்ஸிலேயே மினா, அரபா, முஜ்தலிபா, மக்கா,மதீனா என மற்ற சர்வீஸ்களில் வந்தவர்கள் எல்லாம் சென்றார்கள். அந்த தொலை தூர பஸ்களில் டாய்லட் வசதிகளும் இருந்தன. ஒரே பஸ்ஸில் எல்லா இடங்களும் சென்றால் திரும்பும்போது இடையில் பஸ் நின்று விடும் என்று வியாக்கியானம் கூறினர். இவர்களின் 2 ஆம் ந{ர் பஸ் வரும்போது வழியில் படுத்துக் கொண்டது.

வணக்க வழிபாடுகளில் ஈடுபட முடியாத பயணம்.

ஆண்டு முழுவதும் சும்மா இருக்கும் அவர்கள் 20 நாள் சர்வீஸில் ஒரு ஆண்டு வருவாயை தேடுகிறார்கள். அதற்காக ஹஜ்ஜாளிகளை ஒவ்வொரு ஆண்டும் கசக்கிப் பிழிகிறார்கள். காலை 10 மணி வரை காக்க வைத்து இன்று நாஷ;டா இல்லை என்றார்கள். மதியம் 3 மணிக்கு இன்று மதிய உணவு இல்லை என்றார்கள். இந்த பட்டினிக் கொடுமையால் அல்சர் வியாதிக்கு ஆளாகி விட்டவர்களும் உண்டு. பயணம் புறப்பட்டதிலிருந்து திரும்ப வரும்வரை தொழும் நேரத்தை தவிர எல்லா நேரங்களிலும் சண்டைதான் நடந்தது. வணக்க வழிபாடுகளில் யாராலும் கவனம் செலுத்த முடிந்ததில்லை. வணக்க வழிபாடுகளில் ஈடுபட முடியாத பயணமாகத்தான் இந்தப் பயணம் இருந்தது.

சட்ட ரீதியாக நடவடிக்கை.

இவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எல்லாரும் கையெழுத்திட்டு அபுதாபி சகோதரர்களிடம் ஒப்படைத்தோம். ஷசட்ட ரீதியான நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாதீர்கள். வருகிற ஆண்டுகளில் இது மாதிரி நடக்க மாட்டோம் என அல் இத்திஹாத் ஹஜ் சர்வீஸினர் கூறி உள்ளனர். சாப்பாடு ஒழுங்காக தராதால் அதற்கு 200 ரியால் திரும்ப தருவோம் என்று யஹ்யா ஹுமாயூன் ஒப்புக் கொண்டனர். பிறகு 140 திர்ஹம் வீதம் துபை வந்து தருவதாக தாவூத் அலி ஹஜ்ரத் கூறினார். யாருக்கும் ஒரு பைசா கொடுக்கவில்லை. இப்படிப்பட்டவர்கள் அடுத்த ஆண்டு ஒழுங்காக நடப்போம் என்று அளிக்கும் வாக்குறுதி எப்படி இருக்கும். இந்த ஆண்டு சென்றவர்கள் அடுத்த ஆண்டு செல்ல மாட்டார்கள். எல்லாரும் புதியவர்களாகவே இருப்பார்கள். அவர்களுக்கும் இந்த கதி ஏற்பட வேண்டுமா? சமுதாய நல விரும்பிகளே! சிந்தியுங்கள். இவர்களை சமுதாயத்திற்கு அடையாளம் காட்டிடும் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்புத் தாருங்கள். நடந்த கொடுமைகளின் சுருக்கம்தான் இது என்பதையும் கனத்தில் கொள்ளுங்கள். வஸ்ஸலாம்.
http://pattanathan1.blogspot.com/

Friday, November 28, 2008

கனமூலை பாடசாலை மாணவி ஒருவரை காணவில்லை!

கடந்த மூன்று வாரங்களாக கனமூலை பாடசாலை உயர் வகுப்பு மாணவி ஒருவரை காணவில்லை. நோயாளியான அம்மாணவியின் தந்தை உற்பட சிலர் தேடியரித்துவிட்டனர். பொலிசாரிடம் புகார் கொடுத்திருந்தும் இன்னும் எந்தவித முன்னேற்றமும் இல்லை.

இதற்கிடையில் குறிப்பிட்ட அந்தமாணவி தன் தந்தைக்கு தொலைபேசியில் அழைத்து "தான் ஒரு அரையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் பகல் நேரங்களில் தான் மயக்கமான நிலையில் இருப்பதாகவும் இரவில் மாத்திரமே தனக்கு சுயநினைவு திரும்புவதாகவும், தான் இருக்கும் அரையில் இருந்து பார்க்கும்போது தூரத்தில் ஒரு பள்ளிவாசல் தெரிவதாகவும்" கூறியிருப்பதாக ஒரு கதை அடிபடுகிறது.

வயது வந்த மாணவி ஒருவர் முஸ்லிகள் செறிந்து வாழும் இடத்தில் இருந்து காணமல் போயிருக்கும் இந்நிலையில் கானமூலைவாசிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது மிகுந்த மனவருத்தத்தை தருகின்றது. அத்துடன் அவர்களிடத்தே மாஸ்டர் குடும்பம் என்றும் மௌலவி குடும்பம் என்றும் ஹஜியார் குடும்பம் என்றும் ஜாகிலிய கால கோத்திரக்காரர்கள் போன்று பிளவுபட்ட போக்கே இன்று காணக்கூடியதாக உள்ளது, இன்னும் சில இளம் வயதினர் புனிதமான இஸ்லாமிய இயக்கங்களின் பேரில் இஸ்லாமிய வரையர்றைக்குள் இல்லாத செயட்படுகளையும் மேற்கொண்டு வருகிண்டனர். எது எவ்வாறு இருப்பினும் சமுகத்தில் இமாதிரியான சம்பவங்கள் ஏற்படின் ஊர் வாசிகள் அனைவரும் ஒன்றுபட்டு அம்மாணவியை கண்டுபிடிக்க முயற்சிப்பதே இப்போது அவசியமாகின்றது.