Thursday, January 15, 2009

மரணத்திலும் வழிகின்ற பாசம்!

இன்றைய பொழுதுகள் ஏனோ வழமையாக விட எரிச்சலாகவும் துன்பமாகவும் கழிகின்றன. என்னைப் பிடித்திருக்கும் தடிமனும் காய்ச்சலும் காரணங்களாக இருக்கலாம். ஆனாலும், இரவு இணையத்தில் நுழைகின்றேன். மனதைக் கசக்கிப் பிழியும் சில படங்களும், சுருதி மாறாத அதே செய்திகளும் தான் இருக்கின்றன... நிலம் கைப்பற்றல், முன்னேற்றம் முறியடிப்பு, தாக்குதலில் அப்பாவி உயிர்கள் பலியெடுப்பு.... வழமைக்கு மாறாக இன்று அவர்களும் ஜனநாயக நாடு பற்றி விவாதிக்கின்றார்கள். ஊடகவியலுடன் மருத்துவம் இரு மணித்தியாலங்கள் போராடியும் ஊடகவியலைக் காப்பாற்ற முடியவில்லையாம். :-(

இணையத்தில் மேய்ந்த போதுதான் இந்தப் புகைப்படங்கள் என்னை ஒருகணம் அதிரச்செய்தன. யூதர்களைக் கொன்றதால் சர்வதிகாரியாக மரணித்தான் ஹிட்லர். அவன் சர்வதிகாரிதான். மறுக்கவில்லை. ஆனால், இன்று பாலஸ்தீனத்தில் நடந்து கொண்டிருப்பதற்கு என்ன பெயர்? "ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான போர்" என்ற மகுடம் தாங்கி காசாப் பிரதேசத்தில் தனது அனைத்து அட்டூழியங்களையும் அப்பாவி மக்கள் மீது ஏவி விடுகின்றது இஸ்ரேல் படை. நேற்றுக்கூட தங்களது உறைவிடங்கள் தாக்குதலில் தரைமட்டமானதினால் பாடசாலையில் தஞ்சம் புகுந்த பாலஸ்தீனர்களை இஸ்ரேல் கொத்தாக பலியெடுத்திருக்கின்றது.

உலகத்தின் கண்களுக்கு இவையெல்லாம் தெரிந்தாலும் அவை விழித்தெழப்போவதில்லை. ஒரு அறிக்கை... அல்லது ஒரு கண்டனம். அத்துடன் எல்லாம் அடங்கி விடும். மீட்பர்கள் வருவார்கள் என அமெரிக்காவையோ அல்லது அண்டை தேசங்களையோ நம்பிப் பயனில்லை. வேண்டுமானால், செத்தபின் வாய்க்கரிசியிட அல்லது அடுக்கி வைத்து அனல் மூட்ட அவர்கள் அணிவகுத்து நிற்க முடியும்.

இஸ்ரேலின் ஏவுகணைத் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த தாயும் சேயும் மரணத்தறுவாயில் நடத்தும் பாசப்போராட்டம் இது. இங்கு யார் யாரை மீட்பது?




பாலஸ்தீனத்தில் மட்டும் தானா இந்தப் பாசப்பிணைப்பு...? இல்லவே இல்லை. வீட்டுப் படலையை ஒருமுறை திறவுங்கள்....

இன்பத்திலும், துன்பத்திலும் அல்லாஹ்வை நினைவு கூறுவோம்


அஸ்ஸலாமு அலைக்கும்,


இறைவனை ஏமாற்றுபவர்கள், தனக்கு ஏற்பட்ட துன்பங்களை நீஙக வேண்டும் தனக்கு ஏதேனும் காரிங்கள் நிறைவேற வேண்டும் என்றே கையேந்தி கேட்கிறார்கள் அல்லஹ் அவர்களின் காரியங்களை நிறைவேற்றி கொடுத்த பிறகு, அதை விட்டும் அல்லஹ்வை நினைப்பதை, கேட்பதை நிறுத்தி விடுகிறார்கள்

அல்லஹ் குர்ஆனிலே சொல்லி இருக்கிரான் (விசுவாசம் கொண்டவர்களே, பொறுமையை கொண்டும் தொழுகையை கொண்டும் உதவி தேடுங்கள்)நம் உயிர் இருக்கும் காலமெல்லாம் அல்லஹ் இடத்தில் இரு உலக வெற்றிக்கும் கேட்டவன்னமாக இருக்க வேண்டும் நாம் செய்யும் அனைதையும் அல்லஹ் பார்த்து கொண்டுதானிருகிரான் என்பதை நினைவில் கொண்டு அல்லஹ்விற்கு நன்றி செலுத்த வேண்டும்" பாகம் 11 வசனம் 12.

"மனிதனை துன்பம் தீண்டுமானால்(அதனை நீக்குமாறு) அவன் சாய்ந்து படுத்தவனாக அல்லது உட்கார்ந்தவனாக அல்லது நின்றவனாக நம்மை அவன் பிரத்தித்து அழைக்கிறான், பின்னர் அவனுடயதுன்பத்தை நீக்கும்படி நம்மிடம் பிரார்தனை செய்தவனை போல்(புறக்கனித்து சென்று விடுகிறான், வரம்பு மீருவோருக்கு அவர்கள் செய்து கொண்டிருந்த (தீயது இவ்வாறு அலங்காரமாக ஆக்கப்பட்டு விட்டது) அல்லஹ் படைக்கப்பட்ட அனைத்திற்கும் பறவை, பட்சிகள். ஊர்வனங்களுக்கு இரணம் அளிக்கிறான், அவைகளும் அல்லஹ்வை திக்ரு செய்கின்றன. பாகம் 12(வசனம் 6)

"பூமியிலுள்ள எந்த ஊர்வனவும் அவற்றின் உணவு அல்லஹ்வின் மீது பொறுப்பாக இருந்தே தவிர இல்லை. அவை தங்குமிடதையும் அவை ஒப்படைக்கப்பட்டு சேருமிடத்தையும் அவன்( நன்கு) அறிகிறவன் இவையாவும்(லவ்ஹுல் மஹ்Fபூல் என்னும் புத்தகத்தில் தெளிவாக பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன). பாகம் 12 - வசணம் 15"

எவர்கள் இவ்வுலக வாழ்வையும் அதன் அலங்காரத்தையும் நாடுபவர்களாக இருக்கின்றார்களோ அவர்கள் செயல்களுக்குறிய பலன்களை இவ்வுலகத்திலேயே நாம் பூரனமாக அவர்களுக்கு நிறைவு செய்வோம், அவர்களோ அதில் குறைவு செய்யபட மாட்டார்கள்) இன்பத்திலும், துன்பத்திலும் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து அவனிடமே நாம் அனைவரும் நம் தேவைகளை கேட்டு நம் காரியங்களை அவனிடமே ஒப்படைத்து வல்ல இறைவனிடம் மட்டுமே கேட்கக் கூடியவர்களாக நாம் ஆகுவோமாக, அவனே நேர்வழி காட்ட போதுமானவனாக இருககிறான்

உம்மு பஜ்லுர் ரஹ்மான்ஜித்தா, K.S.A