Friday, January 2, 2009

மூட நம்பிக்கைகள் உலகில் மறையப்போவது எப்போது?


அன்பான எனதருமை நமதூர் வாசக சகோதர, சகோதரிகளே உங்கள் யாவருக்கும் முதற்கண் என் இனிய அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.......

ஒரு நேரத்தில் நமதூர் மக்களிடையே பெரும்பாலும் இல்லத்தரசிகளிடம் நிலவி வந்த ஒரு மூட நம்பிக்கையைப் பற்றி இங்கு ஒரு சிறு கட்டுரை மூலம் விளக்க
விரும்புகிறேன்.

வெளிநாட்டு வாழ்வில் வருடங்கள் பல உருண்டோடி விட்டதால் அப்பழக்கம் இன்றும் நம்மக்களிடம் இருக்கிறதா என்பது தெரியவில்லை... இருப்பினும் சின்னஞ்சிறு பிராயத்தின் அனுபவத்திலிருந்து ஒன்றை இங்கு எழுத வருகிறேன்.

ஆங்கிலப்புத்தாண்டு பிறந்து விட்ட முதல் நாள் அன்று நம் பகுதிகளின் வீடுகளில் யாருக்கேனும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு விட்டால் அல்லது ஏதேனும் அசொளகரியம் ஏற்பட்டு விட்டால் அன்றைய தினம் சிகிச்சைக்காக
மருத்துவமனை செல்வதை விரும்பமாட்டார்கள். முடிந்தவரை மருத்துவமனை செல்வதை தவிர்த்து விடுவார்கள். காரணம் அன்று மருத்துவமனை சென்றால் அவ்வருடம் முழுவதும் மருத்துவமனை செல்ல நேரிடும் என்ற மூட நம்பிக்கையால்
தான் .

நம் அறியாமையினாலும், மார்க்கத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வமின்மையாலும் முஹர்ரம் என்றால் என்ன? என்று கேட்பவர்களாகவும் மாறாக ஆங்கிலப்புத்தாண்டை
வரவேற்க அறியாமலேயே சிகப்புக் கம்பளம் விரிப்பவர்களாகவும் தான் நம்மில் பெரும்பாலானோர் இருந்து வருகிறோம்.

வருடங்கள், மாதங்கள், வாரங்கள், நாட்கள், நேரங்கள் மற்றும்
மணித்துளிகளெல்லாம் மனிதன் தன் வாழ்க்கை கட்டமைப்பை ஒரு கட்டுக்கோப்பாக கொண்டு செல்ல அவனாலேயே ஏற்படுத்தப்பட்டது தான் இவைகள் யாவும் என்பதை நாம் இங்கு சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

புத்தாண்டு தினம் ஒருவன் சூழ்நிலையால் அழ நேரிடும் பொழுது அவன் ஆண்டு முழுவதும் அழப்போவதில்லை. மாறாக ஒருவன் அத்தினம் சிரித்து மகிழ்வதால்
அவ்வாண்டு முழுவதும் சிரித்துக் கொண்டே இருக்கப் போவதில்லை.

உலகில் நல்ல நேரம், கெட்ட நேரம் எதுவும் உண்டா? என சஹாபாப் பெருமக்கள் எம்பெருமானார் நபி (ஸல்...) அவர்களிடம் வினவியபோது.. அதற்குப் பெருமானார்
கூறியது என்னவெனில் "எவன் ஒருவன் ஃபஜர் தொழுகையை இமாம் ஜமாஅத்துடன் தொழுகிறானோ அன்றைய முழு தினமும் அவனுக்கு நல்ல நாள் தான்" என்று இயம்பியதாக நாம் ஹதீஸில் பார்க்கின்றோம்.

நம் வாழ்வில் மூட நம்பிக்கைகளுக்கு அவிழ்க்க முடியா முடிச்சிட்டு நல்ல (மார்க்க) நம்பிக்கைகளை சுதந்திரமாக அவிழ்த்து விட முயல வேண்டும். உள்ளங்கை நெல்லிக்கனி போல் மார்க்கத்தை நம் கைகளில் வைத்துக்கொண்டு நாம்
சின்னஞ்சிறு விசயங்களுக்கெல்லாம் அந்நியர்களின் அதாவது
இறைநிராகரிப்போரின் உதவியை நாடுகிறோம். இனி வரும் காலங்களில் நம் யாவரையும் இத்தகைய பெரும் தவறுகள் செய்வதிலிருந்து அல்லாஹ் பாதுகாப்பானாக...ஆமீன்..

குடும்பத்தில் பல கஷ்டங்கள் நிறைந்திருந்தாலும் புத்தாண்டு தினம் சாதாரன நாட்களைப் போல் அல்லாது நல்ல கறி சமைத்து சாப்பிடுவது, புத்தாடை அணிவது, மத்தாப்பு கொளுத்துவது இவைகளெல்லாம் மார்க்கத்தில் நிச்சயம் சொல்லப்படாத ஒன்று.

அதுபோல் பிறந்த நாள் அன்று அழுக்கை சட்டை அணிந்திருப்பவன் அன்றே சாகப்போவதுமில்லை. புத்தாடை அணிந்து ஆடம்பர பவனி வருகிறவன் நூற்றாண்டுகள்
பல இவ்வுலகில் வாழப்போவதுமில்லை...

கடலில் மூழ்குபவனுக்கெல்லாம் விலையுயர்ந்த முத்துக்கள்
கிடைப்பதில்லை..ஆனால் மூழ்காமல் ஒருவனுக்கும் முத்துக்கள் கிடைப்பதில்லை. இறைவன் நாடியவனுக்கே தன் ஹிதாயத் என்னும் நேர்வழியைக் காட்டுகின்றான்..

காலமும், நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. எல்லாம் உலக சக்திகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு ஆதிக்கம் செலுத்துபவனின் கட்டளைப்படியே நடக்கக் கூடியதாக இருக்கின்றது.

இதுபோல் ஆயிரம் மூட நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும் நம் பகுதிகளில் நிறையவே நிரம்பி இருக்கின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அதை ஒவ்வொன்றாகவோ அல்லது ஒட்டு மொத்தமாகவோ நம் தளத்தில் கட்டுரையாக பதிய வேண்டுகிறேன்.

எனவே நாம் முடிந்தவரை உண்மையான முஸ்லிமாக வாழ முயற்சிப்போம். முடியாவிட்டாலும் முயற்சிப்போம்... நரக நெருப்பிற்கு இரையாக, விறகாக யார் தான் விரும்புவர்? அவைகளெல்லாம் மாயை/இல்லை என்பவர்களைத் தவிர.

இத்தளம் மெருகூட்டப்பட்டு இன்னும் பல தகவல்களுடன் நம்மக்களின் நல்லாதரவுடன் அகிலமெங்கும் வலம் வர வேண்டும் என இத்தருணத்தில் வல்ல இறைவனைப் பிரார்த்தித்தவனாக....

அபுஹசன் - சவுதியிலிருந்து.

செவிட்டில் அறைந்தார் போல்,நாலு கேள்வி???

மக்கிப்போக உள்ள மாய உலகின் அலங்காரங்களால் சிக்குண்டு கிடக்கும் நம் சமுதாயத்தோரே 1400 ஆண்டுகளுக்கு முன்பு சத்தியத்தை எடுத்துறைத்து நடைமுறைபடுத்திகாட்டிய நம் உயிரிலும் மேலான முஹம்மது (ஸல்) அவர்கள் இவ்வுலகம் ஈமான்கொண்டோருக்கு சிறைச்சாலையும், இறை மறுப்பாளர்களுக்கு சுவனப்பூஞ்சோலையுமாகும் என்று சூளுரைத்த சொல் இன்னும் ஏன் நம் சமுதாயத்தினரின் செவியில் விழாமல் உள்ளது.


தாந்தோன்றித்தனமாகவும் மனம்போனபோக்கிலும் நம் ஷரீஅத்தில் தடுக்கப்பட்ட விஷயங்களை செய்துவிட்டு காலம் செய்த கோலம் என்று காலத்தை குறைகூறுவது எவ்விதத்தில் சரியாகும். இப்படி ஒரு சொல் வருமென்பதினாலோ என்னவோ அன்றே பெருமனார் (ஸல்) அவர்கள் எவ்வித்தத்திலும் காலத்தை குறை கூறவேண்டாம் என்று எச்சரித்துவிட்டார்க்ள்.


இன்று ஷரீ அத்தில் அனுமதியில்லா விஷயங்களை தன் குடும்பத்தின் பேரும்,புகழும்தரம்தாழ்ந்துவிடக்கூடாதுஎன்பதற்க்காகவும்,முகஸ்துதிக்காகவும் ஆடம்பரத்தையும் அனாச்சாரத்தையும் தவரு என்று அரிந்திருந்தும் செய்துவிட்டு தவரை சரிசெய்ய முனைவோர் இனியாவது அத்தகைய தவறுகளை தொடறாமலிருக்கவும் அத்தகைய தவறுகள் என்னிலையிலும் குறிப்பாக என்னோடும் நம் சமுதாயத்தோடும் கலந்துவிடாமல் அல்லாஹ் நம்மை பதுகாத்தருள்வானாக-ஆமீன்

இன்ஷா அல்லாஹ் எளிமையாக நடைபெறவேன்டிய சுன்னத்தான விஷயங்களில் தேவையற்ற விஷயங்களை கூடுதலாக்கி தனக்குதானே வேலைபளுவை அதிகரித்து ஈமானையே பரிகொடுக்க செய்யும் விஷயங்களை சுட்டிகாட்டி ஒரும்போதும் அத்தகைய தவறு என் வாழ்விலும் இதைபடிப்போர் வாழ்விலும் நிகாழாமல் அல்லாஹ் அருள்பாளிப்பானாக - ஆமீன்.

A.H.அப்துர் ரஷீத் ஆலிம்

அட!இது நம்ம ஆளு!!!

சலீம் நானாவுக்கு இருப்பு கொள்ளவில்லை."அடடா என்னமா,பேசுகிறார்.இஸ்லாத்தை அழகா,எவ்வளவு இனிமையா மேற்கோள் காட்டி மாணவர்கள்கிட்டேயும், எல்லா தரப்பு மக்கள்கிட்டேயும் விளக்குகிறார்."

பஷீர் காக்காவுக்கு முதலில் புரியவில்லை.சலீம் நானாவைப் பார்த்து கேட்டார்,"என்ன சலீமு,யாரு,என்ன கொஞ்சம் விளக்கமாத்தான் செல்லேன்"என்றார்.

"பஷீர் காக்கா, அந்த சகோதரர் பேரு எஸ்.ஏ.மன்சூர் அலி.நம்ம நீடூர(மயிலாடுதுறை)சேர்ந்தவரு.பி எஸ்சி கெமிஸ்ட்ரி,பி எட்,எம் ஏ சோசியாலஜி,பீ ஜீ டிப்ளோமா கவுன்சிலிங் படிச்சிருக்கார்.கடந்த பத்து வருஷமா இஸ்லாமிய படிப்புத்துறையில ஆசிரியராவும்,மாணவர்களுக்கு கவுன்சிலராகவும் வண்டலூர் கிரசன்ட் ஸ்கூலில் பணிபுரிந்துவிட்டு,மாணவர்கள்,எல்லா தரப்பு மக்கள் என்று மனித வள மேம்பாடு பத்தி,ஆலோசனை,கருத்து பரிமாற்றம் எல்லாம் செய்கிறார்.இது மூலமா நிறைய மாணவர்கள்,தொழில் முனைவோர்,இப்படி எல்லா தரப்பு மக்களும் பயன் பெற்று வர்றாங்க."

பஷீர் காக்காவுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை."நம்ம சமுதாயத்துல இப்படி ஒரு ஆளா?சலீமு,இவர நம்ம ஊருக்கு கூட்டி வந்து,மனித வள மேம்பாடு போன்ற கவுன்சிலிங் ஏற்பாடு பண்ணி,மாணவர்களுக்கும்,எல்லா தரப்பட்ட மக்களுக்கும் பயன் கிடக்கிற மாதிரி செய்யணும்,ஆமா அவர பத்தி,எங்க விசாரிக்கிறது?ஆர்வம் பீறிட கேட்டார் பஷீர் காக்கா.

"காக்கா,நீடூர் ஆன்லைன் போயி,உனக்குள் ஒரு சுரங்கம் என்கிற தலைப்புல பாத்தா,அவரோட பேச்சுக்கள வீடியோவுல பாக்கலாம்,நம்ம பீஸ் ட்ரைன் பிளாகில போய், உனக்குள் ஒரு சுரங்கம் அப்படிங்கிற தொடுப்ப கிளிக் பண்ணினா,நேரடியா அவரோட வெப் சைட் திறக்கும்,அது அவரோட சொந்த வெப் சைட்.அதுல நிறைய கட்டுரைகள,அருமையான விளக்கங்களோட பாக்கலாம்,அதுல இருக்கிற ஸ்பேஷாலிட்டி என்ன தெரியமா,அது குரான் மற்றும் ஹதீஸ் அடிப்படையில விளக்குறதுதான். அதோட அவரோட முகவரியும் குறிச்சுக்கோங்க,எல்லாருக்கும் தேவைப்படும், S.A. Mansoor Ali, 3 – 125 / A, Jinnah Street,NIDUR – 609 203,Nagappattinam Dist, Tamilnadu, INDIA".

"சலீமு,அவரு நீடூருக்கு மட்டும் உள்ள சொத்து கிடையாது,நம்ம சமுதாயத்தோட சொத்து.ஒட்டு மொத்த முஸ்லிம்களோட சொத்து,அவரு மூலமா நம்ம மாணவர்கள் பயன் பெறனும். "பஷீர் காக்கா உறுதியாய் சொன்னார்".