Saturday, June 27, 2015

மார்க்க கல்வியை கற்க வேண்டியதன் அவசியம்


book1
ஒவ்வொரு முஃமினுக்கும் புனிதமான குர்ஆனையும், முஹம்மது நபி (ஸல்) அவர்களின் போதனையையும் படித்து மார்க்க அறிவை பெறுவது கடமையாக்கப்பட்டுள்ளது.
அல்லாஹ் கூறுகிறான்: -
“ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்-குர்ஆன் இறக்கியருளப் பெற்றது …” (அல்-குர்ஆன் 2:185)
அவர்கள் (அறிந்து) நல்லுபதேசம் பெறுவதற்காக, இதை நாம் உம்முடைய மொழியில் எளிதாக்கினோம். (அல்-குர்ஆன் 44:58)
ஹா, மீம். விளக்கமான இவ்வேதத்தின் மீது சத்தியமாக. நீங்கள் அறிந்து கொள்வதற்காக இதனை நாம் அரபி மொழி குர்ஆனாக நிச்சயமாக ஆக்கியிருக்கிறோம். (அல்-குர்ஆன் 43:1-3)
அலிஃப், லாம், றா. இவை தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும். நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக, இதனை அரபி மொழியிலான குர்ஆனாக நிச்சயமாக நாமே இறக்கி வைத்தோம். (அல்-குர்ஆன் 12:1-2)
இன்னும், ஒவ்வொரு சமூகத்திலும் அ(ந்த சமூகத்த)வர்களிலிருந்தே அவர்களுக்கு எதிர்சாட்சியை அவர்களுக்கு எதிராக, எழுப்பி அந்நாளில், உம்மை இவர்களுக்கு (உம்மை நிராகரிக்க முற்படும் இம்மக்களுக்கு) எதிராகச் சாட்சியாக நாம் கொண்டு வருவோம்; மேலும், இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம். (அல்-குர்ஆன் 16:2)
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடத்திலிருந்து இறக்கியருளப்பட்டது. அரபுமொழியில் அமைந்த இக் குர்ஆனுடைய வசனங்கள் அறிந்துணரும் மக்களுக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளது. நன்மாராயம் கூறுவதாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாகவும் (அது இருக்கின்றது); ஆனால் அவர்களில் பெரும்பாலோர் புறக்கணிக்கின்றனர்; அவர்கள் செவியேற்பதும் இல்லை. (அல்-குர்ஆன் 41:2-4)
தன் அடியார் மீது எந்த விதமான (முரண்பாடு) கோணலும் இல்லாததாக ஆக்கி இவ்வேதத்தை இறக்கி வைத்தானே, அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகும். அது உறுதியான (வழியைக் காண்பிப்ப)து, அவனிடத்திலிருந்துள்ள கடினமான வேதனையைப் பற்றி அச்சமூட்டுவதற்காகவும் ஸாலிஹான (நற்)செயல்கள் செய்யும் முஃமின்களுக்கு – நிச்சயமாக அவர்களுக்கு அழகிய நற்கூலி(யாக சுவனபதி) இருக்கிறது என்று நன்மாராயங் கூறுவதற்காகவும் (குர்ஆனை அருளினான்). அதில் (அதாவது சுவனபதியில்) அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள். (அல்-குர்ஆன் 18:1-3)
(நபியே!) உமக்கு வஹீ அறிவிக்கப்பட்டதை பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்; நிச்சயமாக நீர் நேரான பாதையின் மீதே இருக்கின்றீர். நிச்சயமாக இது உமக்கும் உம் சமூகத்தாருக்கும் (கீர்த்தியளிக்கும்) உபதேசமாக இருக்கிறது; (இதைப் பின்பற்றியது பற்றி) நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். (அல்-குர்ஆன் 43:43-44)
முஹம்மது நபி (ஸல்) கூறினார்கள்: -
“ஒவ்வொரு முஃமினுக்கும் மார்க்க அறிவைப் பெறுவது கடமையாகும்” (திர்மிதி)
“இஸ்லாத்தை மறுமலர்ச்சி அடையச் செய்வதற்காக, இஸ்லாமிய அறிவை பெற்றுக் கொண்டிருக்கும்போது யார் உயிர் நீத்தார்களோ, அவர்கள் சொர்க்கத்தில் நபிமார்களுக்கு அடுத்த நிலையில் இருப்பார்கள்” என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். (முஸ்லிம்)
முஹம்மது நபி (ஸல்) நவின்றுள்ளார்கள்: -
யார் ஒருவர் தன்னுடைய சகோதரனை இந்த உலக ஆசைகளின் துன்பங்களில் இருந்து நீக்குகிறாரோ, அவரை அல்லாஹ் மறுமை நாளின் துன்பங்களில் இருந்து நீக்குவான். யார் ஒருவர் இந்த உலகத்தில் ஒரு முஸ்லிமின் குற்றத்தை மறைக்கிறாறோ, அல்லாஹ் மறுமை நாளில் அவருடைய குற்றத்தை மறைப்பான்; தன்னுடைய சகோதரனுக்கு பின்னால் இருந்து உதவி செய்யக் கூடியவனுக்கு,  அல்லாஹ் அவரின் பின்னால் இருந்து உதவி செய்வான். அறிவைப் பெறுவதற்காக யார் நடந்து செல்கிறார்களோ அவருக்கு அல்லாஹ் அவருடைய பாதையை இலகுவாக்குகிறான்; சொர்க்கத்திற்கான வழியையும் காட்டுகிறான்; யாரெல்லாம் அல்லாஹ்வின் இல்லத்தில் ஒன்று கூடி குர்ஆனை ஓதி, பிறருக்கும் கற்றுக்கொடுக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வின் அருள் சூழ்ந்து கொள்ளும் மலக்குகளும் சுழ்ந்து கொள்வார்கள். அல்லாஹ் தனக்கு அருகில் உள்ளவர்களிடம் அவர்களைப்பற்றி சிலாகித்துக் கூறுவான். (திர்மிதி)
முஹம்மது நபி (ஸல்) நவின்றுள்ளார்கள்: -
இரவில் ஒரு மணி நேரம் மார்க்க அறிவைப் பெறுவதற்காக வெளியே செல்வது முழு இரவிலும் நின்று வணங்கி செலவழிப்பதை விட சிறந்தது. (திர்மிதி)
இறை இல்லத்தில் இரண்டு கூட்டங்களின் பக்கம் (நபி {ஸல்}) சென்றார்கள்; இரண்டு வகுப்பினரும் சிறந்தவர்கள் என்றாலும், ஒரு வகுப்பினர் மற்றொரு வகுப்பினரைவிட சிறந்தவர். ஒரு வகுப்பினர் அல்லாஹ்விடம் துவா கேட்டுக் கொண்டிருந்தனர். அல்லாஹ் நாடினால் அவர்கள் கேட்டதை அவர்களுக்கு வழங்குவான் அல்லது தாமதப்படுத்துவான்; மார்க்கத்தைப் புரிந்து கொள்வதற்காக மார்க்க அறிவைப் பெற முயற்சித்து அதை அறியாதவர்களுக்கும் கற்பித்துக் கொண்டும் அந்த இரண்டாம் வகுப்பினரே சிறந்தவர். நிச்சயமாக நான் ஒரு கற்றுக் கொடுப்பவனாகவே அனுப்பப்பட்டுள்ளேன்” என்று சொல்லி அவர்களிடையே அமர்ந்து விட்டார்கள்.
இஸ்லாமிய அடிப்படை அறிவைப் பெறுவது ஒவ்வொரு பருவ வயதை அடைந்த, புத்தி சுவாதீனமுள்ள முஸ்லீம்கள் அனைவருக்கும் கடமையாக்கப்பட்டுள்ளது என்று எல்லா இஸ்லாமிய அறிஞர்களும் சட்ட வல்லுனர்களும் ஒரு மனதாக குரல் கொடுக்கின்றனர்.
ஒரு சில மக்கள் தான், மார்க்க அறிவைப் பெருவதில் இருந்து தவிர்ந்து கொள்வதற்காக, வெட்கப்பட்டு, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை சொல்லி தங்களுடைய செயல்களை நியாயப்படுத்துகின்றனர்.
மார்க்க அறிவைப் பெறுவதற்கு ஒவ்வொரு முஸ்லிமான ஆணும் பெண்ணும் முயற்சிக்க வேண்டும் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.
நன்றி : www.islamhelpline.com

Thursday, January 15, 2009

மரணத்திலும் வழிகின்ற பாசம்!

இன்றைய பொழுதுகள் ஏனோ வழமையாக விட எரிச்சலாகவும் துன்பமாகவும் கழிகின்றன. என்னைப் பிடித்திருக்கும் தடிமனும் காய்ச்சலும் காரணங்களாக இருக்கலாம். ஆனாலும், இரவு இணையத்தில் நுழைகின்றேன். மனதைக் கசக்கிப் பிழியும் சில படங்களும், சுருதி மாறாத அதே செய்திகளும் தான் இருக்கின்றன... நிலம் கைப்பற்றல், முன்னேற்றம் முறியடிப்பு, தாக்குதலில் அப்பாவி உயிர்கள் பலியெடுப்பு.... வழமைக்கு மாறாக இன்று அவர்களும் ஜனநாயக நாடு பற்றி விவாதிக்கின்றார்கள். ஊடகவியலுடன் மருத்துவம் இரு மணித்தியாலங்கள் போராடியும் ஊடகவியலைக் காப்பாற்ற முடியவில்லையாம். :-(

இணையத்தில் மேய்ந்த போதுதான் இந்தப் புகைப்படங்கள் என்னை ஒருகணம் அதிரச்செய்தன. யூதர்களைக் கொன்றதால் சர்வதிகாரியாக மரணித்தான் ஹிட்லர். அவன் சர்வதிகாரிதான். மறுக்கவில்லை. ஆனால், இன்று பாலஸ்தீனத்தில் நடந்து கொண்டிருப்பதற்கு என்ன பெயர்? "ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான போர்" என்ற மகுடம் தாங்கி காசாப் பிரதேசத்தில் தனது அனைத்து அட்டூழியங்களையும் அப்பாவி மக்கள் மீது ஏவி விடுகின்றது இஸ்ரேல் படை. நேற்றுக்கூட தங்களது உறைவிடங்கள் தாக்குதலில் தரைமட்டமானதினால் பாடசாலையில் தஞ்சம் புகுந்த பாலஸ்தீனர்களை இஸ்ரேல் கொத்தாக பலியெடுத்திருக்கின்றது.

உலகத்தின் கண்களுக்கு இவையெல்லாம் தெரிந்தாலும் அவை விழித்தெழப்போவதில்லை. ஒரு அறிக்கை... அல்லது ஒரு கண்டனம். அத்துடன் எல்லாம் அடங்கி விடும். மீட்பர்கள் வருவார்கள் என அமெரிக்காவையோ அல்லது அண்டை தேசங்களையோ நம்பிப் பயனில்லை. வேண்டுமானால், செத்தபின் வாய்க்கரிசியிட அல்லது அடுக்கி வைத்து அனல் மூட்ட அவர்கள் அணிவகுத்து நிற்க முடியும்.

இஸ்ரேலின் ஏவுகணைத் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த தாயும் சேயும் மரணத்தறுவாயில் நடத்தும் பாசப்போராட்டம் இது. இங்கு யார் யாரை மீட்பது?




பாலஸ்தீனத்தில் மட்டும் தானா இந்தப் பாசப்பிணைப்பு...? இல்லவே இல்லை. வீட்டுப் படலையை ஒருமுறை திறவுங்கள்....

இன்பத்திலும், துன்பத்திலும் அல்லாஹ்வை நினைவு கூறுவோம்


அஸ்ஸலாமு அலைக்கும்,


இறைவனை ஏமாற்றுபவர்கள், தனக்கு ஏற்பட்ட துன்பங்களை நீஙக வேண்டும் தனக்கு ஏதேனும் காரிங்கள் நிறைவேற வேண்டும் என்றே கையேந்தி கேட்கிறார்கள் அல்லஹ் அவர்களின் காரியங்களை நிறைவேற்றி கொடுத்த பிறகு, அதை விட்டும் அல்லஹ்வை நினைப்பதை, கேட்பதை நிறுத்தி விடுகிறார்கள்

அல்லஹ் குர்ஆனிலே சொல்லி இருக்கிரான் (விசுவாசம் கொண்டவர்களே, பொறுமையை கொண்டும் தொழுகையை கொண்டும் உதவி தேடுங்கள்)நம் உயிர் இருக்கும் காலமெல்லாம் அல்லஹ் இடத்தில் இரு உலக வெற்றிக்கும் கேட்டவன்னமாக இருக்க வேண்டும் நாம் செய்யும் அனைதையும் அல்லஹ் பார்த்து கொண்டுதானிருகிரான் என்பதை நினைவில் கொண்டு அல்லஹ்விற்கு நன்றி செலுத்த வேண்டும்" பாகம் 11 வசனம் 12.

"மனிதனை துன்பம் தீண்டுமானால்(அதனை நீக்குமாறு) அவன் சாய்ந்து படுத்தவனாக அல்லது உட்கார்ந்தவனாக அல்லது நின்றவனாக நம்மை அவன் பிரத்தித்து அழைக்கிறான், பின்னர் அவனுடயதுன்பத்தை நீக்கும்படி நம்மிடம் பிரார்தனை செய்தவனை போல்(புறக்கனித்து சென்று விடுகிறான், வரம்பு மீருவோருக்கு அவர்கள் செய்து கொண்டிருந்த (தீயது இவ்வாறு அலங்காரமாக ஆக்கப்பட்டு விட்டது) அல்லஹ் படைக்கப்பட்ட அனைத்திற்கும் பறவை, பட்சிகள். ஊர்வனங்களுக்கு இரணம் அளிக்கிறான், அவைகளும் அல்லஹ்வை திக்ரு செய்கின்றன. பாகம் 12(வசனம் 6)

"பூமியிலுள்ள எந்த ஊர்வனவும் அவற்றின் உணவு அல்லஹ்வின் மீது பொறுப்பாக இருந்தே தவிர இல்லை. அவை தங்குமிடதையும் அவை ஒப்படைக்கப்பட்டு சேருமிடத்தையும் அவன்( நன்கு) அறிகிறவன் இவையாவும்(லவ்ஹுல் மஹ்Fபூல் என்னும் புத்தகத்தில் தெளிவாக பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன). பாகம் 12 - வசணம் 15"

எவர்கள் இவ்வுலக வாழ்வையும் அதன் அலங்காரத்தையும் நாடுபவர்களாக இருக்கின்றார்களோ அவர்கள் செயல்களுக்குறிய பலன்களை இவ்வுலகத்திலேயே நாம் பூரனமாக அவர்களுக்கு நிறைவு செய்வோம், அவர்களோ அதில் குறைவு செய்யபட மாட்டார்கள்) இன்பத்திலும், துன்பத்திலும் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து அவனிடமே நாம் அனைவரும் நம் தேவைகளை கேட்டு நம் காரியங்களை அவனிடமே ஒப்படைத்து வல்ல இறைவனிடம் மட்டுமே கேட்கக் கூடியவர்களாக நாம் ஆகுவோமாக, அவனே நேர்வழி காட்ட போதுமானவனாக இருககிறான்

உம்மு பஜ்லுர் ரஹ்மான்ஜித்தா, K.S.A

Tuesday, January 6, 2009

நெஞ்சு பொறுக்குதில்லையே ..........

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள புகைப்படம் உங்கள் உள்ளத்தில் ஒரு பெரும் எரிமலையை வெட்டிக்கச் செய்யும்...
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த கல்நெஞ்சம் கொண்ட இஸ்ரேல் அரக்க அரசை நினைத்து விட்டால்......
அரக்கத்தனமான இத்தாக்குதலில் ஊனமானது பாலஸ்தீனம் மட்டுமல்ல.. ஒட்டு மொத்த உலகமும் தான்...
"அற்ப உலகமே நீ என்னத்தெ சொல்ல நா என்னத்தெ கேட்க" என்று அடம் பிடிக்கும் இஸ்ரேல் அரசே உன் கொட்டம் இன்றில்லா விட்டாலும் ஒரு நாள் ஒழியும்... அத்தினமே உலகம் அமைதி பெறும்.
வானத்திலிருந்து வரும் இறை வேதனையை எந்த சக்தி கொண்டு தடுக்க முடியும்? எந்த ரேடாரில் கணிக்க முடியும்? இறைவா இத்துடன் வரும் படத்தைக் கூட பார்க்க சக்தி அற்றவர்களாக நாம் இருக்கிறோம்....
தீவிரவாதம், தீவிரவாதம் என்று சொல்லி உலகில் தீவிரவாதத்தை பிரபல்யப்படுத்தியது யார்? அதற்காக அணு,ஆயுத விற்பனையை அகிலமெங்கும் அமோகப்படுத்தியது யார்? சொல் மனமே......
பெற்றவள் மடியில் விளையாட வேண்டியச் சிறுவன். பெற்றவளை மடியில் இட்டு மரணப் படுக்கையில் இட்ட கோரம்...அந்தோ பாவம்...
ஈரமற்ற இதயம்...பாவிகளின் கொடூரம்....இதையெல்லாம் கண்டும் காணாத உலகம்...
இதனால் ஊமையாகிப் போன .நா. சபை.. ஊனமாகிப்போன போர்க்கால நியதி..குருடாகிப் போன உலக நாடுகள்...செவிடாகிப் போன உலக வல்லரசுகள்..உலக தீவிரவாத தாக்குதலுக்குப் பொங்கியெழும் உலகம் இதில் மட்டும் மங்கிப்போனது ஏனோ?
ஒரு கன்னத்தில் அரைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்று யார் சொன்னது? ஒரு கன்னத்தில் அரைந்தால் நாம் ஒட்டு மொத்த குலத்தையல்லவா அழிப்போம்... அட சண்டாலப்பாவிகளா..சனியன் பிடித்த பைத்தியங்களா...
உன் அடக்குமுறையால் நீ ஒன்றும் பல நூறு ஆண்டுகள் ஆளப்போவதில்லை இவ்வுலகில். மரணத்தை ஒவ்வொரு உயிரும் புசித்தே தீர வேண்டியுள்ளதடா மடையா.....
உனக்கு சாவு மணி அடிக்க அந்த இறைவனேப் பொறுப்பேற்றாலும் ஆச்சரியப் பட ஒன்றும் இல்லை...சுறாக்களை வேட்டையாடுகிறோம் என்று சொல்லி பச்சிளம் குஞ்சுக்களையும் வேட்டையாடி விட்டாயே....பாவி....
இவ்வேசக்கார உலகின் முன் நீ ஒரு செல்லப்பிள்ளை தான். ஆனால் அகிலத்தை படைத்த அந்த இறைவன் முன் நீ ஒரு செல்லாக்காசு தானடா....அபகரிக்கப்பட்ட உன் நாடு ஒரு நாள் அல்லோலப்படும் பாரு....
பாரபட்ச உலகமே உனக்கு ஒரு நாள் பாடை கட்டப்படும் அதுவே இறுதிநாள்..அதுபற்றி உனக்கு நன்றாகவேத் தெரியும்...தெரிந்தும் நீ சும்மா இருக்கிறாயே இது நியாயமா? தர்மமா? இது தான் உன் வேசமா?
உன் போலி வேசங்கள் களையப்பட்டு, சாயங்கள் வெளுக்கப்பட்டு நிராயுதபாணியாக ஏக இறைவன் முன் நிற்க வேண்டியதை மறந்து விட்டாயடா....
தன் தாயின் கடைசி மூச்சை தன் மடியில் வைத்து பார்க்கும் இப்பாலகன். நாளை மன்னாதி மன்னனாகுவானா? இல்லை உன்னைக் கொல்ல புறப்படும் கொலைவெறியன் ஆவானா? யார் அறிவார் அந்த இறைவனைத் தவிர....
பெற்ற அம்மா இல்லாத உலகில் அவன் முன் நீ கோடான கோடியைக் கொண்டு கொட்டினாலும் அவன் அதை ஒரு குப்பையாகத் தானடா மதிப்பான்...காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது உனக்கு மட்டும் தானா?
இறைவா....உலகில் நீயே எல்லா அட்டூழியங்களையும், அனாச்சார களியாட்டங்களையும், அடக்கு முறைகளையும், அத்துமீறல்களையும், உரிமைக்குரல்வளைகள் நெறிக்கப்படுவதையும் அசராது பார்த்துக் கொண்டிருப்பவன்...
உன் தீர்ப்பை எவன் மாற்ற முடியும்? நீ பொறுமையாளர்களுடன் இருக்கிறாய்...பொறுத்திருக்கிறோம் உன் தீர்ப்பிற்காக...அழுகிறோம் உன் அரவணைப்பிற்காக...எங்கள் ஒட்டு மொத்த உள்ளக்குமுறலுக்கு இன்றில்லாவிட்டாலும் ஒருநாள் உன் விடை இருக்கிறது.
நீயே உலக அடக்குமுறைகளை தகர்த்தெறிந்து அமைதி நிலவச் செய்வாய்...வேசக்கார போலி வல்லரசுகளை மண்ணைக்கவ்வச் செய்ய உனக்கு ஒரு சில மணித்துளிகளே மிகுதியானது...
உலகில் நீதி கிடைக்க வாய்ப்பில்லை நீயே தீர்ப்பு வழங்குவாயாக.. அகிலத்தின் அதிபதியாய்... நீதிக்கெல்லாம் நீதி அரசனாய்....உன்னிடமே விட்டு விடுகிறோம்..விடியல் என்ற நம்பிக்கையில்.. நீயேக் காத்தருள்வாயாக உலகின் அப்பாவி மக்களை....
நீர்க்குமிழி போன்று நிலையற்ற இவ்வுலகில் பல்லாண்டு வாழ்வோம் என எண்ணிக் கொண்டிருக்கும் கொடியவர்களின் கொட்டம் அடங்கி, வல்லவர்கள், நல்லவர்கள் பல பெருகி உலகெங்கும் அமைதி நிலவிட நீயே உதவிடுவாய் இறைவா....
இறுதியில் முடிக்க வார்த்தைகள் இன்றி உள்ளக்குமுறலுடன்...
அபுஹசன்...

Monday, January 5, 2009

அல்லாஹ்வே! உன்னிடமே மன்றாடுகிறோம்,கெஞ்சுகிறோம்,எங்கள் மக்களை காப்பாயாக!உதவி புரிவாயாக!!

அஸ்ஸலாமு அலைகும்!


இன்று நம் சமுதாயத்தில் நடைபெறும் தேவையற்ற விஷயங்களினால் ஈமானே பரிபோகிவிடும் என்பதை மனதிற்கொண்டு அவற்றை தவிர்ந்துகொள்ளும் விதத்தை குரான் ஹதீதை அடிப்படையாக வைத்து நானும் தெளிவுபெறலாம் என்று தமாமில் நிலவும் கடுமையான குளிரையும் பொருட்படுத்தாது சுபுஹு தொழ சென்றேன்,

ஆனால் அந்த தொழுகையில் குனூத்து ஓதுவதை கேட்டபின் உள்ளம் உறுகுளைந்து ஏன் அனீதமிழைக்கப்படும் பாலஸ்தீனை பற்றி எழுதி இஸ்லாமிய சகோதரர்க்ளின் உள்ளக்குமுறல்களை ஏகோபித்தவகையில் வல்லோன் அல்லாஹ்விடம் அரபு நாடுகள் என்றில்லாது உலக முஸ்லிம்கள் அனைவரின் இருகறங்களும் எல்லா நேர தொழுகையிலும் ஏந்தப்படவேண்டும் என்று உந்தப்பட்டேன்.

ஆமாம் சகோதரர்களே, சில இடங்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு அது சரியோ தவரோ நொண்டி குதிரைக்கு சருக்கியது ஒரு சாக்கு என்பதைபோல் எதையாவது கூறி ஒரு சில நாட்களில் தீர்வு செய்கின்றனர்.

ஆனால் எவ்வித காரணமும் இன்றி அனீதமிழைக்கப்பட்டு எங்கே தீர்வு என்று எங்கள் பாலஸ்த்தீன இஸ்லாமிய உயிர்கள் சேதப்படுத்தப்படுவது ஏன் என்பதை என்னும்போது ஏதோ ஒருகொள்கையில் இருந்துகொண்டு தாவா பனியை செய்யக்கூடிய சிலர் இங்கு தவ் அத் செய்தால் அல்லாஹ் எங்காவது ஒரு மூலையில் யாருக்காவது ஹிதாயத்தை கொடுப்பான் என்று சொன்ன கூற்று உண்மையென்றால் - யா அல்லாஹ் பாலஸ்த்தீனத்தில் இஸ்லாமிய உயிர்கள் கோரமாக கொள்ளப்படுவதற்க்கு இங்கு இருந்து கொண்டு என்போன்றோர் செய்யும் தவறுகள்தான் காரனம் என்று உள்ளம் நடுங்குகிறது.


யாஅல்லாஹ் இத்தனை அவகாசங்கள் தந்தாய் இதுவே போதும் ரஹ்மானே.இனிமேல் எவ்விதத்திலும் உனக்கு புற்ம்பாக எதையும் செய்ய்மாட்டோம் என்று உன்னையே சாட்ச்சியாக்கி சபதமெடிக்கிறோம்.


யாஅல்லாஹ் காஜாவில் பிறக்கும் பச்சிலம் குழந்தையின் இரத்தவாசனை மாருவதற்க்குமுன்னால் அடங்காபிடாரி இஸ்ரவேலனால் அனீதமாக கொல்லப்படுவதை இனியும் பொறுக்க முடியாது

ஒரு தாயின் கருவறையிலிருந்து வெளிவந்த பிஞ்சு குழந்தை பசியால்- அருந்தாயின் அமுதுக்காக ஏங்கி கேட்பதைபோல் நாங்களும் கேட்கிறோம்


இனியாவது பாதிக்கும் மக்களை பற்றி கவலைப்படாமலும், ஆடம்பரமாகவும்,திமிராகவும், சுற்றிதிரியும் அரேபிய மன்னர்களின் உள்ளங்களில் ஒரு திருப்பத்தை தந்தருள்வாயா ரஹ்மானே! என்று தவிப்புடன்...........!


A.H.அப்துர் ரஷீத் ரஹ்மானி
-------------------------------------------------

சகோதரர்களே,ஒவ்வொரு தொழுகையிலும் குனூத்து ஓதி துவா செய்யுங்கள், உங்கள் முஹல்லா பள்ளியிலும் சொல்லி துவா செய்ய சொல்லுங்கள்.இது போன்ற கடினமான சூழ்நிலையில் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் காட்டித்தந்த வழி முறை இது.

Friday, January 2, 2009

மூட நம்பிக்கைகள் உலகில் மறையப்போவது எப்போது?


அன்பான எனதருமை நமதூர் வாசக சகோதர, சகோதரிகளே உங்கள் யாவருக்கும் முதற்கண் என் இனிய அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.......

ஒரு நேரத்தில் நமதூர் மக்களிடையே பெரும்பாலும் இல்லத்தரசிகளிடம் நிலவி வந்த ஒரு மூட நம்பிக்கையைப் பற்றி இங்கு ஒரு சிறு கட்டுரை மூலம் விளக்க
விரும்புகிறேன்.

வெளிநாட்டு வாழ்வில் வருடங்கள் பல உருண்டோடி விட்டதால் அப்பழக்கம் இன்றும் நம்மக்களிடம் இருக்கிறதா என்பது தெரியவில்லை... இருப்பினும் சின்னஞ்சிறு பிராயத்தின் அனுபவத்திலிருந்து ஒன்றை இங்கு எழுத வருகிறேன்.

ஆங்கிலப்புத்தாண்டு பிறந்து விட்ட முதல் நாள் அன்று நம் பகுதிகளின் வீடுகளில் யாருக்கேனும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு விட்டால் அல்லது ஏதேனும் அசொளகரியம் ஏற்பட்டு விட்டால் அன்றைய தினம் சிகிச்சைக்காக
மருத்துவமனை செல்வதை விரும்பமாட்டார்கள். முடிந்தவரை மருத்துவமனை செல்வதை தவிர்த்து விடுவார்கள். காரணம் அன்று மருத்துவமனை சென்றால் அவ்வருடம் முழுவதும் மருத்துவமனை செல்ல நேரிடும் என்ற மூட நம்பிக்கையால்
தான் .

நம் அறியாமையினாலும், மார்க்கத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வமின்மையாலும் முஹர்ரம் என்றால் என்ன? என்று கேட்பவர்களாகவும் மாறாக ஆங்கிலப்புத்தாண்டை
வரவேற்க அறியாமலேயே சிகப்புக் கம்பளம் விரிப்பவர்களாகவும் தான் நம்மில் பெரும்பாலானோர் இருந்து வருகிறோம்.

வருடங்கள், மாதங்கள், வாரங்கள், நாட்கள், நேரங்கள் மற்றும்
மணித்துளிகளெல்லாம் மனிதன் தன் வாழ்க்கை கட்டமைப்பை ஒரு கட்டுக்கோப்பாக கொண்டு செல்ல அவனாலேயே ஏற்படுத்தப்பட்டது தான் இவைகள் யாவும் என்பதை நாம் இங்கு சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

புத்தாண்டு தினம் ஒருவன் சூழ்நிலையால் அழ நேரிடும் பொழுது அவன் ஆண்டு முழுவதும் அழப்போவதில்லை. மாறாக ஒருவன் அத்தினம் சிரித்து மகிழ்வதால்
அவ்வாண்டு முழுவதும் சிரித்துக் கொண்டே இருக்கப் போவதில்லை.

உலகில் நல்ல நேரம், கெட்ட நேரம் எதுவும் உண்டா? என சஹாபாப் பெருமக்கள் எம்பெருமானார் நபி (ஸல்...) அவர்களிடம் வினவியபோது.. அதற்குப் பெருமானார்
கூறியது என்னவெனில் "எவன் ஒருவன் ஃபஜர் தொழுகையை இமாம் ஜமாஅத்துடன் தொழுகிறானோ அன்றைய முழு தினமும் அவனுக்கு நல்ல நாள் தான்" என்று இயம்பியதாக நாம் ஹதீஸில் பார்க்கின்றோம்.

நம் வாழ்வில் மூட நம்பிக்கைகளுக்கு அவிழ்க்க முடியா முடிச்சிட்டு நல்ல (மார்க்க) நம்பிக்கைகளை சுதந்திரமாக அவிழ்த்து விட முயல வேண்டும். உள்ளங்கை நெல்லிக்கனி போல் மார்க்கத்தை நம் கைகளில் வைத்துக்கொண்டு நாம்
சின்னஞ்சிறு விசயங்களுக்கெல்லாம் அந்நியர்களின் அதாவது
இறைநிராகரிப்போரின் உதவியை நாடுகிறோம். இனி வரும் காலங்களில் நம் யாவரையும் இத்தகைய பெரும் தவறுகள் செய்வதிலிருந்து அல்லாஹ் பாதுகாப்பானாக...ஆமீன்..

குடும்பத்தில் பல கஷ்டங்கள் நிறைந்திருந்தாலும் புத்தாண்டு தினம் சாதாரன நாட்களைப் போல் அல்லாது நல்ல கறி சமைத்து சாப்பிடுவது, புத்தாடை அணிவது, மத்தாப்பு கொளுத்துவது இவைகளெல்லாம் மார்க்கத்தில் நிச்சயம் சொல்லப்படாத ஒன்று.

அதுபோல் பிறந்த நாள் அன்று அழுக்கை சட்டை அணிந்திருப்பவன் அன்றே சாகப்போவதுமில்லை. புத்தாடை அணிந்து ஆடம்பர பவனி வருகிறவன் நூற்றாண்டுகள்
பல இவ்வுலகில் வாழப்போவதுமில்லை...

கடலில் மூழ்குபவனுக்கெல்லாம் விலையுயர்ந்த முத்துக்கள்
கிடைப்பதில்லை..ஆனால் மூழ்காமல் ஒருவனுக்கும் முத்துக்கள் கிடைப்பதில்லை. இறைவன் நாடியவனுக்கே தன் ஹிதாயத் என்னும் நேர்வழியைக் காட்டுகின்றான்..

காலமும், நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. எல்லாம் உலக சக்திகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு ஆதிக்கம் செலுத்துபவனின் கட்டளைப்படியே நடக்கக் கூடியதாக இருக்கின்றது.

இதுபோல் ஆயிரம் மூட நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும் நம் பகுதிகளில் நிறையவே நிரம்பி இருக்கின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அதை ஒவ்வொன்றாகவோ அல்லது ஒட்டு மொத்தமாகவோ நம் தளத்தில் கட்டுரையாக பதிய வேண்டுகிறேன்.

எனவே நாம் முடிந்தவரை உண்மையான முஸ்லிமாக வாழ முயற்சிப்போம். முடியாவிட்டாலும் முயற்சிப்போம்... நரக நெருப்பிற்கு இரையாக, விறகாக யார் தான் விரும்புவர்? அவைகளெல்லாம் மாயை/இல்லை என்பவர்களைத் தவிர.

இத்தளம் மெருகூட்டப்பட்டு இன்னும் பல தகவல்களுடன் நம்மக்களின் நல்லாதரவுடன் அகிலமெங்கும் வலம் வர வேண்டும் என இத்தருணத்தில் வல்ல இறைவனைப் பிரார்த்தித்தவனாக....

அபுஹசன் - சவுதியிலிருந்து.

செவிட்டில் அறைந்தார் போல்,நாலு கேள்வி???

மக்கிப்போக உள்ள மாய உலகின் அலங்காரங்களால் சிக்குண்டு கிடக்கும் நம் சமுதாயத்தோரே 1400 ஆண்டுகளுக்கு முன்பு சத்தியத்தை எடுத்துறைத்து நடைமுறைபடுத்திகாட்டிய நம் உயிரிலும் மேலான முஹம்மது (ஸல்) அவர்கள் இவ்வுலகம் ஈமான்கொண்டோருக்கு சிறைச்சாலையும், இறை மறுப்பாளர்களுக்கு சுவனப்பூஞ்சோலையுமாகும் என்று சூளுரைத்த சொல் இன்னும் ஏன் நம் சமுதாயத்தினரின் செவியில் விழாமல் உள்ளது.


தாந்தோன்றித்தனமாகவும் மனம்போனபோக்கிலும் நம் ஷரீஅத்தில் தடுக்கப்பட்ட விஷயங்களை செய்துவிட்டு காலம் செய்த கோலம் என்று காலத்தை குறைகூறுவது எவ்விதத்தில் சரியாகும். இப்படி ஒரு சொல் வருமென்பதினாலோ என்னவோ அன்றே பெருமனார் (ஸல்) அவர்கள் எவ்வித்தத்திலும் காலத்தை குறை கூறவேண்டாம் என்று எச்சரித்துவிட்டார்க்ள்.


இன்று ஷரீ அத்தில் அனுமதியில்லா விஷயங்களை தன் குடும்பத்தின் பேரும்,புகழும்தரம்தாழ்ந்துவிடக்கூடாதுஎன்பதற்க்காகவும்,முகஸ்துதிக்காகவும் ஆடம்பரத்தையும் அனாச்சாரத்தையும் தவரு என்று அரிந்திருந்தும் செய்துவிட்டு தவரை சரிசெய்ய முனைவோர் இனியாவது அத்தகைய தவறுகளை தொடறாமலிருக்கவும் அத்தகைய தவறுகள் என்னிலையிலும் குறிப்பாக என்னோடும் நம் சமுதாயத்தோடும் கலந்துவிடாமல் அல்லாஹ் நம்மை பதுகாத்தருள்வானாக-ஆமீன்

இன்ஷா அல்லாஹ் எளிமையாக நடைபெறவேன்டிய சுன்னத்தான விஷயங்களில் தேவையற்ற விஷயங்களை கூடுதலாக்கி தனக்குதானே வேலைபளுவை அதிகரித்து ஈமானையே பரிகொடுக்க செய்யும் விஷயங்களை சுட்டிகாட்டி ஒரும்போதும் அத்தகைய தவறு என் வாழ்விலும் இதைபடிப்போர் வாழ்விலும் நிகாழாமல் அல்லாஹ் அருள்பாளிப்பானாக - ஆமீன்.

A.H.அப்துர் ரஷீத் ஆலிம்